பக்கம்:மேனகா 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாய்வதன் முன் பதுங்குதல்

49

தம்மணாளரது கொடிய நோக்கால் குழையு மன்றோ? அவள் அதற்கு முன் தனது நாயகனிடம் ஒரு நாளும் இன்புற்றிருந்தவள் அன்று. ஆதலின், இனித் தன் எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்குமோ வென்று அவள் கவலை கொண்டு ஏங்கினாள்.

கழிந்த ஒரு வருஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பகலே ஒரு யுகம் போல வளர்ந்து வருத்திக் கடைசியில் அகன்றது. இரவில் யாவரும் உணவருந்தித் தத்தம் சயனத்திற்குப் போயினர். மேனகா தனது படுக்கையறையிலிருந்த வண்ணம் தன் கணவன் அன்று தன்னுடன் தனிமையில் பேச வருவாரோ வென்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். கடைசியாக அவர் தன் அறைக்குள் வந்து தன்னுடன் பேசாமல் சயனித்ததைக் காண, அவளது மனம் ஏங்கியது. அப்போதும் அவருடைய வெறுப்பும், கோபமும் தணியவில்லையோ வென அவள் ஐயமுற்றாள். ஆயினும், அவர் சயன அறைக்கு வந்ததிலிருந்து அவருக்குத் தன் மீது சொற்பமாயினும் அன்பு பிறந்திருக்க வேண்டுமென்று நினைத்தாள்.

ஆனால், அவர் முதலில் தன்னோடு பேசுவாரென்று தான் எதிர் பார்ப்பது தகாதென மதித்தாள்; பெண்பாலாகிய தானே முதலில் பணிவாக நடக்க வேண்டுமென்று எண்ணினாள். ஆனால் எதைப்பற்றி அவரிடம் பேசுவ தென்பது அவளுக்குத் தோன்றவில்லை. சிறிது யோசனை செய்தாள். முதலில் அவருக்கு மகிழ்வுண்டாக்கும்படி தான் பேசவேண்டு மென்று நினைத்தாள். தான் முதலில் மன்னிப்புக் கேட்பது போலவும் இருத்தல் வேண்டும்; தானே முதலிற் பேசியதாயும் இருத்தல் வேண்டும் என்று நினைத்துச்சிறிது தயங்கி, கவிந்த தலையோடு நாணி நின்றாள்; பிறகு மெல்ல அவனுடைய காலடியிற் சென்று, தனது மென்மையான கரங்களால், தாமரை இதழால் தடவுதலைப்போல அவனுடைய காலை இன்பகரமாய் வருடினாள்; அன்று அவர் பேசாவிடினும், தான் அவரது காலைத் தீண்டியதற்காகக் கோபங்கொண்டு தன்னை

மே.கா.I–5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/67&oldid=1251010" இலிருந்து மீள்விக்கப்பட்டது