பக்கம்:மேனகா 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மேனகா

போகும் பாதையிலுள்ள பள்ளத் தெருவில் குடியிருந்த பதினைந்து பள்ளர்களைக் கைதி செய்து, தமது ஸ்டேஷனில் சிறைப்படுத்தி, உண்மையைச் சொல்லும்படி குட்டைத் தடியால் அவர்களது. மண்டையில் மொத்தி வாயாலும் மூக்காலும் இரத்தம் கக்கும்படி அவர்களை அன்று பகல் முழுதும் மர்த்தனம் செய்து கொண்டிருந்தார். டிப்டி கலெக்டர் பலரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு எவ்வித அனுகூலமும் செய்யாமையால், அவர்மீது ஆத்திரமடைந்த கட்சிக்காரர்கள் பள்ளர்களை விட்டு அந்தக் கொள்ளையை நடத்தி இருக்கிறார்கள் என்றும், தாம் அதற்குத் தக்க நடவடிக்கை களைச் செய்து வருவதாகவும் பெரிய கலெக்டருக்குத் தமது சப் இன்ஸ்பெக்டர் மூலமாகச் செய்தி சொல்லியனுப்பினார்.

கொள்ளையின் விவரங்களையும், தங்கம்மாள் படு வதை செய்யப்பட்டதையும் கேட்ட பெரிய கலெக்டர் துரை மிகவும் விசனித்து இரங்கினார். சாம்பசிவையங்கார் அவரது அபிப்பிராயத்தில் மிகவும் பொல்லாத துஷ்டராகத் தோன்றினா ராயினும், தமது கீழ் உத்தியோகஸ்தரான அவருக்குப் பிறர் அத்தகைய தீங்கு செய்ததைப் பொறாமல் பதைபதைத்து பறந்தார். வெள்ளைக்காரர் பெண் மக்களிடம் உண்மை யிலேயே அதிகமதிப்பும், அன்பும் வைப்பது இயல் பாதலால், தங்கம்மாளுக்கு நேர்ந்த விபத்தைக் கேட்டு துரை டிப்டி கலெக்டர் விஷயத்தில் பச்சாதாபமும், க்ஷமையும் கொண்டார். உடனே தமது பைசைக்கிலில் ஏறிக்கொண்டு வைத்திய சாலைக்குப் பறந்து சென்று, வேடனால் சுடப்பட்ட பஞ்சவர்ணக்கிளிபோல மிகவும் பரிதாபமான நிலையில் அங்கு கிடந்த வடிவழகியான தங்கம்மாளைப் பார்த்தார். அவரது மனதும் கண்களும் கலங்கின. அந்தத் துயரமான சம்பவம் அவருடைய மனதில் மாறாமல் நிரந்தரமாக பதிந்துபோனது. மிகவும் ஜாக்கிரதையாக வைத்தியம் செய்து காப்பாத்தும்படி கிட்டனிடம் வற்புறுத்திச் சொல்லிவிட்டு அவர், தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/101&oldid=1251978" இலிருந்து மீள்விக்கப்பட்டது