பக்கம்:மேனகா 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மேனகா

ஒன்றும் கிடையாது. ஆனால், ஒரு ஜீவாதாரநிதியில் (Life Insurance Fund) அவர் பணம் செலுத்திக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு 50-வயதாகும் போது அதிலிருந்து முப்பதினாயிரம் ரூபா கிடைக்கும். ஆனால், அவருடைய வயது இன்னம் அவ்வளவு ஆகவில்லை. அந்த நிதியிலிருந்து அவசர நிமித்தம் ஏதாவது சொற்பத் தொகையைக் கடனாக வாங்க அவருக்கு உரிமை யிருந்தது. ஆனால், அந்த நிதியின் நிருவாகஸ்தரால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பத்திரமும் மற்றப் பொருட்களுடன் களவாடப்பட்டுப் போனமையால், அதை அடமானம் வைத்துக் கடன் வாங்குவதும் கூடாமல் போய்விட்டது. ஆகையால், சாம்பசிவையங்காரின் அப்போதைய பெறுமானம் ரூபா 87-5-0 தான். அவ்வளவு சொற்ப காலத்தில் தாம் ஏழையிலும் பரம ஏழையாய்ப் போனதை நினைத்து, “ஆகா! பண மில்லாதவன் பிண மென்பது இப்போது நன்றாகத் தெரிந்தது. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை, அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை என்றவர் பரமஞானி யல்லவா; அவர் சொன்னது ஒரு நாளும் பொய்யாகாது” என்று நினைத்து ஏங்கி உட்கார்ந்துவிட்டார். ஆனால், உண்மையில் அவரது நிலைமை அவ்வளவு கேவலமான தன்று, கனகம்மாளுக்கு அவளது தந்தையால் மஞ்சற் காணியாகக் கொடுக்கப்பட்ட நிலமும் வீடும் இருந்தன. அவை இரண்டும் எண்ணாயிரம் ரூபா பெறும். ஆனால், அவை செங்கற்பட்டிற்கு மேற்கில் பதினைந்து மைல் தூரத்திற்கு அப்பாலிருந்த பகற் கொள்ளைப்பாக்கம் என்னும் ஊரிலிருந்தன. அவை தமக்குச் சொந்த மல்ல வாதலால் சாம்பசிவத்திற்கு அவற்றின் நினைவு உண்டாக வில்லை. தாம் செய்ய வேண்டுவதைப்பற்றி கனகம்மாளது மனதில் முன்னரே தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தனது நிலத்தையும் வீட்டையும் அந்த அவசரத்திற்கு விற்க முடியாதாயினும், அவற்றை அடமானம் வைத்தாகிலும் ஆயிரம் ரூபா வாங்கித் தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/113&oldid=1251992" இலிருந்து மீள்விக்கப்பட்டது