பக்கம்:மேனகா 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மேனகா


கனகம்மாள்:- நாமெல்லோரும் தங்கம்மாளை எடுத்துக் கொண்டு சாயுங்கால வண்டியில் பட்டணம் போவோம். நீ செங்கற்பட்டில் இறங்கி, பொழுது விடியுமுன் கிராமத்துக்குப் போய் நாட்டுக்கோட்டை நீலகண்ட செட்டியாரிடம் அடமானம் வைத்து உடனே பணத்தை வாங்கிக்கொண்டு நாளை சாயுங்காலம் பட்டணத்துக்கு வந்துவிடு. நான் டாக்டரிடம் தங்கம்மாளைக் கொண்டுபோய், “இதோ பணம் வருகிறது” என்று சொல்லி ஆபரேஷன் செய்யச் சொல்லுகிறேன்.

சாம்ப:- அது நல்ல யோசனைதான். ஆனால், அதில் ஒரு இடைஞ்சல் இருக்கிறது.

கனக:- என்ன இடைஞ்சல்?

சாம்ப:- நிலம் வீடு முதலியவை உன் பேரிலல்லவா இருக்கின்றன. நான் எப்படி அடமானப் பத்திரம் எழுதிக் கொடுக்கிறது? (சிறிது யோசனை செய்து) இருக்கட்டும். அதற்கு ஒரு காரியம் செய்வோம். உன்பேரில் இருக்கும் நிலத்தையும் வீட்டையும், அடமானம் வைக்க நீ எனக்கு ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்ததாக இப்போதே ஒரு தஸ்தாவேஜு எழுதி ரிஜிஸ்டர் செய்துகொள்வோம்-என்றார்.

கனக:- சரி; சீக்கிரம் ஆகட்டும்; ரெங்கராஜுவை அனுப்பி முத்திரைக் காகிதம் வாங்கிக்கொண்டு வரச்சொல் - என்றாள். அவ்வாறே முத்திரைக் காகிதம் வரவழைக்கப்பட்டது. அதிகாரப் பத்திரம் தயாராய் ரிஜிஸ்டர் கச்சேரியில் பதியவும் செய்யப்பட்டது. அதற்குள் மாலை ஐந்து மணி சமயம் ஆய்விட்டது.

சேவக ரெங்கராஜு அவர்களுடன் சென்னைக்கு வரவேண்டு மென்னும் ஆசை கொண்டவனாய் கச்சேரிக்குப் போய் மானேஜரைக் கண்டு தனக்கு எட்டு நாளைக்கு ரஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/117&oldid=1251997" இலிருந்து மீள்விக்கப்பட்டது