பக்கம்:மேனகா 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மேனகா

சேவகன் ஒரு புஸ்தகத்தைக் காட்டி அதில் கையெழுத்துச் செய்யும்படி கூறி பெளண்டன் பேனா (Fountain Pen)வை நீட்டினான். சாம்பசிவம் அதை வாங்கிக்கொண்டார். ஆனால், உடனே கையெழுத்துச் செய்யவில்லை. தாம் மறுநாள் எங்கிருக்க வேண்டுமோ, எப்பாடு பட நேருமோ என்பதை அறியக் கூடவில்லை. ஆகையால், தமது சமாதானத்தை உடனே எழுதிக் கொடுத்துவிட நினைத்தார். அருகிலிருந்த கடையில் ஒரு காகிதம் வாங்கிவரச் செய்து, அதில் அடியில் வருமாறு மறுமொழி எழுதினார்:

"ஐயா! தங்களுடைய உத்தரவைப் பெற்றுக்கொண்டேன். அதில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் வியப்பை உண்டாக்கு கின்றன. அதில் குறிப்பிட்டுள்ள குற்றங்களில் ஒன்றையேனும் நான் செய்யவில்லை. முதலாவது பகுதியில் கூறப்பட்டபடி நான் சென்னைக்குப் போனதே இல்லை. நான் போனதாகக் கிடைத்திருக்கும் சாட்சியும் உண்மையானதல்ல. இரண்டாவது பகுதியில் கண்டபடி, நான் அனுப்பியது பொய்க் கணக்கன்று; அதில் சொல்லப்பட்டபடி நான் அம்பாள் சமுத்திரம் முதலிய இடங்களிலேதான் முகாம் செய்திருந்தேன். மூன்றாவது பகுதியில் குறிப்பிட்டபடி நான் நேற்று சென்னையி லிருந்தது உண்மையே; முந்திய நாள் நான் ரஜா கேட்டதும் தாங்கள் மறுத்ததும் உண்மையே. ஆனால், அதன் பிறகு நான் வேறு மனு எழுதி தாசில்தார் தாந்தோனிராயர் மூலமாகத் தங்களுக்கு அனுப்பி, எனக்கு ரஜா கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அந்த மனுவைத் தங்களிடம் எடுத்துவந்த தாசில்தார், தாங்கள் எனக்கு ரஜா கொடுத்து விட்டீர்களென்று செய்தியனுப்பினார். என்னுடைய அவசரத்தில் அதை உண்மையென்று நம்பி நான் போய்விட்டேன். தாந்தோனிராயர் கண்ணியமான மனிதர்; பொறுப்பு வாய்ந்த உத்தியோகஸ்தர்; ஆதலால், அவருடைய சொல்லை நிஜமென்று மதித்தேன். அவரை நீங்கள் கேட்பீர்களானால், அவர் இதை உண்மையென்றே ஒப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/121&oldid=1252001" இலிருந்து மீள்விக்கப்பட்டது