பக்கம்:மேனகா 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

139

ஸ்டேஷனுக்குள் போய், சென்னைக்குப் போக டிக்கெட் கேட்டார். உள்ளே இருந்த குமாஸ்தா சாம்பசிவையங்காரைப் பார்த்து நகைத்து ஏளனம் செய்து, “அதோ அடுத்த அறையில் டிக்கெட்டு கொடுக்கிறார்கள்; போய் வாங்கிக்கொள்ளும்” என்றார். அதை உண்மையென்று நம்பிய சாம்பசிவம் அடுத்த அறைக்குப் போய் பார்க்க, அதற்குள் மனிதரே காணப்பட வில்லை, அதில் விளக்குகள், எண்ணெய், கயிறுகள், கடப்பாரைகள் முதலிய பல வகைப்பட்ட சாமான்கள் நிறைந்திருந்தன. அவர் அதை பார்த்துவிட்டுத் திரும்பிவந்து ஸ்டேஷன் மாஸ்டரிருந்த அறைக்குப்போய் கேட்க , அவர் “இனிமேல் நாளைக்குத்தான் வண்டி. சென்னைக்குப் போகும் வண்டி விடியற்காலம் ஐந்தரை மணிக்கு இங்கே வரும்” என்று சொல்லிவிட்டு ஜன்னல்கள், கதவு முதலியவற்றை மூடி உட்புறம் தாளிட்டுக்கொண்டார். அந்த மறுமொழியைக் கேட்ட சாம்பசிவம் தவிக்கிறார்; உடனே இரண்டு இறகுகள் தமது புஜங்களில் முளைத்திருந்தால், அப்போதே பறந்து போய்விடலாமே என்று நினைக்கிறார். அப்போது தமது மனைவி, உயிருடன் இருக்கிறாளோ, அல்லது விண்ணுலக மடைந்தாளோ; டாக்டர் துரை மார்பைக் கீறி எலும்புகளை எடுத்தாரோ இல்லையோ என்று பலவாறு நினைத்து வண்டிக்காரர்களிடம் கேட்டார். அங்கிருந்து சென்னை நெடுந்துரமாதலால், ஒருவரும் வரத் துணியவில்லை. அவ்வூரில் வாடைகைக்கு மோட்டார் வண்டி அகப்படுமோ என்று விசாரித்தார். அது மருந்துக்கும் அகப்படாது என்னும் மறுமொழி கிடைத்தது. என்ன செய்வார் இன்னதைத்தான் செய்வதென்று அறியமாட்டாமல் நெடுநேரம் அங்கு தமது பளுவான மூட்டையைத் தூக்கிக்கொண்டே அலைந்தார். விடியற்காலம் ஐந்தரை மணிவரையில் ஸ்டேஷனில் இருப்பதைத் தவிர வேறு வழி எதுவும் தோன்றவில்லை. அவர் தமது பண மூட்டையை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/140&oldid=1252022" இலிருந்து மீள்விக்கப்பட்டது