பக்கம்:மேனகா 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

153

மாத்திரம் அவனுக்கு அவசியமானவையாயும் இன்பகரமான வையாயும் தோன்றின. ஆரம்பத்தில், அவளது பணி விடைகளை ஏற்றுக்கொள்ளவே அவன் மனமற்றிருந்தான். அவள் ஐந்து நிமிஷ மேனும் தன்னைவிட்டு அப்புறம் போகமாட்டாளா வென்று சுவாமியை வேண்டுவான். அந்த வெறுப்பு படிப்படியாகக் குறைந்து, அவள் அப்போதைக்கப் போது கேட்ட கேள்விக்கு மறுமொழி கூற மனமற்று அவன் மெளனம் சாதித்தான். என்றாலும் அந்த தாதி தனது விஷயத்தில் பெருத்த பாடுபட்டு வருவதை அவன் நாளடைவில் நன்றாக உணர்ந்தான். அவள் சம்பளத்திற்கு வேலை செய்யும் கூலிக்காரியானாலும், தனது வேலையை அவ்வளவு திறமையாகவும் பிறர் மனதைக் கவரும்படியும் செய்வதைக் கண்டு, அவளது விஷயத்தில் ஒருவகையான நல்ல அபிப்பிராயமும், நன்றியறிவும் அவன் கொள்ள ஆரம்பித்தான். தான் அந்த வைத்தியசாலையில் இருக்கப்போகும் இன்னம் சில சொற்ப நாட்களும், அவளுடன் சாதாரணமாக இருந்துவிட்டுப் போவதனால் தனது கொள்கைக்கு எவ்விதமான கெடுதலுமில்லை யென்று அவன் நினைத்தான். தன் விஷயத்தில் எவ்விதமான குற்றமும் செய்யாதவளும், நன்மைகளையே புரிந்து உயிரை மீட்பவளுமான அவளோடு தான் பேசாமலே வருமம் பாராட்டுவது கேவலம் மிருகத்தனமென்றும், நன்றி கெட்டவன் செய்யும் காரிய மென்றும் நினைத்தவனாய், மெல்ல அவளிருந்த பக்கமாகத் திரும்பி அவளது முகத்தை உற்று நோக்கினான். அவன் தன்னோடு ஏதோ விஷயத்தைப் பற்றிப் பேச விரும்புகிறா னென்று கண்ட அந்த வெள்ளை கிள்ளை, “என்ன வேண்டும்?” என்று வினவினாள்.

உடனே வராகசாமி பலஹீனமடைந்த குரலில், “இரவிலும் பகலிலும் நீ ஒருத்தியே இங்கே இருக்கிறாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/154&oldid=1252169" இலிருந்து மீள்விக்கப்பட்டது