பக்கம்:மேனகா 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

155

மயக்கிவிடக் கூடிய மகா தந்திரி என அவன் நினைத்தான். ஆனால், உண்மையில் அவளது குணம் எப்படிப்பட்டதோ என்னும் சந்தேகம் அவனது மனதில் தோன்றியது; அவள்மீது ஒருவகை வெறுப்பும், விருப்பும் ஒருங்கே உதித்து அவன் மனதை வதைத்தன. தான் கேட்ட கேள்விக்கு அவள் துடுக்காக மறுமொழி கூறாமல், பெண் தன்மையோடு பேசியதைப்பற்றி ஒருவகையான திருப்தியும் தோன்றியது. அவன் தனது கண்களை மூடிக்கொண்டு சிறிது மெளனமாயிருந்தான். பிறகு கண்களைத் திறந்து கொண்டு, “நான் இங்கே வந்து எத்தனை நாளாகிறது?” என்று கேட்டான்.

வெள்ளைக்காரி:-பன்னிரண்டு நாட்களாகின்றன என்றாள்.

வராக:- என்னுடைய சொந்தக்காரர்கள் யாராவது இங்கே வந்து என்னைப் பார்த்துப் போகிறார்களா ?

வெள்ளை :- உங்களுடைய அக்காளும், சாமாவையர் என்ற இன்னொரு மனிதரும் அப்போதைக்கப்போது வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இவ்விடத்துக்கு வந்த தினத்துக்கு மறுநாள் உங்களுடைய மாமனாரும், அவருடைய தாயாரும், சாமாவையரும் வந்தார்கள்- என்றாள்.

அதைக் கேட்ட வராகசாமி, அவர்கள் வந்தபோது என்ன நடந்ததென்பதை அறிய ஆவல் கொண்டவனாய், “அவர்கள் வந்து என்ன செய்தார்கள்? அவர்களும் தினம் தினம் வந்து கொண்டிருக்கிறார்களா?” என்றான்.

வெள்ளைக்காரப்பெண், “அவர்கள் அன்றைக்கு மாத்திரந்தான் வந்தார்கள்; இங்கே வந்தவுடன் உங்களுடைய பரிதாபகரமான நிலைமையையும் உடம்பு முற்றிலும் நிறைந்திருந்த புண்களையும் கண்டு இருவரும் விசனித்து அழுதார்கள்; கண்ணீர்விட்டுக் கதறினார்கள்; சாமாவையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/156&oldid=1252171" இலிருந்து மீள்விக்கப்பட்டது