பக்கம்:மேனகா 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

மேனகா


வெள்ளை:- (புன்னகை செய்து) நீங்கள் வக்கீல் உத்தி யோகம் செய்பவர்கள். உங்களுடன் நான் வாக்குவாதம் செய்வது அதிகப் பிரசங்கித்தனமாகும்; இருந்தாலும், பெண் பேதையான ஒருத்தியின் மேல் அபாண்டமான குற்றம் சுமத்துவதைக் காண பெண்பிள்ளையான எனக்குச் சகிக்க வில்லை. அதனால் கேட்கிறேன். கோபிக்கக் கூடாது. பெட்டி பூட்டப்பட்டிருந்ததாகச் சொல்லுகிறீர்களே! டிரங்குப் பெட்டியின் பூட்டு உள்பக்கத்தில் இருப்பதல்லவா? ஒருவர் பூட்டை உடைத்து, அதற்குள் கடிதங்களை வைத்துவிட்டுப் பிறகு வேறு பூட்டு அதற்கு போட்டுவித்துப் பூட்டி வைத்திருக்கக்கூடாதா? நீங்கள் உடைத்தபோது இருந்த பூட்டை, அதற்கு முன் எப்போதும் இருந்த பூட்டென்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்துகொண்டீர்களா? - என்றாள்.

அதைக் கேட்ட வராகசாமி இன்னமும் அதிகமான தடுமாற்றமடைந்து சிறிது யோசனை செய்தான்; “அப்படி உடைத்திருந்தால், அதை என்னுடைய சகோதரிகளே செய்ய வேண்டும். அவர்கள் ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்ய வேண்டிய முகாந்திரமுமில்லை” என்றான்.

வெள்ளை:- அவர்கள் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம், அவள் தஞ்சாவூரிலிருந்து இங்கே வருமுன் அவளுடைய தகப்பனார் வீட்டிலுள்ள மனிதர் யாராவது அவள்மேல் பகைமையினால் இப்பொய்க்கடிதம் எழுதி வைத்திருக்கலாமல்லவா? பிறகு புருஷன் அதைப் படித்தால் அவளுக்குத் துன்பம் சம்பவிக்கும் என்னும் கெட்ட நோக்கத்துடன் எவரேனும் வைத்திருந்தாலாகாதா? அங்கே அவளுடைய தாயாருடன் கூடப்பிறந்தவன் ஒருவன் இருப் பதாகவும், அவன் கொள்ளையரைப்பற்றி தந்தியனுப்பிய தாகவும் சாமாவையர் சொன்னாரே! அவனுக்கும் அவளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/167&oldid=1252199" இலிருந்து மீள்விக்கப்பட்டது