பக்கம்:மேனகா 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

17

என்ன தீமை சம்பவிக்குமோ! அதை நாம் அறியோம்; நேற்றிரவு நீ தத்தளித்து முடிவில் எமன் வாயிலிருந்தபோது உன்னைக் காப்பாற்ற ஆண்டவன் என்னைக் கொணர்ந்து விட வில்லையா? நீங்காதது போலத் தோன்றும் பயங்கரமான விபத்தையும் நீக்கக்கூடிய ஆண்டவன் எங்கிருந்து நம்மெல்லோரையும் பாதுகாத்து வருகிறான். அவனையே முற்றிலும் நம்பி, நாம் ஒழுங்கான வழியிலே செல்வோம். பிறகு ஏற்படும் முடிவு அவனருளைப் பொருத்ததாகும். ஏதோ ஒரு நோக்கத்துடன் நம்மை விபத்தில் விடுத்தவன் அதை விலக்குவதற்கும் வழி காட்டுவான். ஆகையால் மனந்தளர விடாதே யம்மா! மேலே நடக்க வேண்டுவன வற்றைப் பற்றி அப்புறம் யோசனை செய்வோம். இப்போது உனது உடம்பை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவது முக்கியமான விஷயம். நீ இப்போது அதிகமாய்ப் பேசுவதும், வருந்துவதும் கூடாதென்று துரைஸானி சொல்லியிருக்கிறாள். ஆகையால், பல்லைத் தேய்த்துக்கொள். பிராமணப் பரிசாரகர் காப்பித் தயாரித்திருக்கிறார். இந்த பங்களா மிகவும் பிரமாண்டமானது; நாங்களெல்லோரும் வசிக்குமிடம் நெடுந்துரத்திற்கு அப்பாலிருக்கிறது. இது, நானும் என்னுடைய அக்காளும் ஏகாந்தமாயிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் சிறிய சவுக்கண்டி. இங்கே எவ்வித அசுத்தமுமில்லை. பரிசாரகர் காப்பி தயாரித்திருக்கிறார். முன்னால் அதில் கொஞ்சம் சாப்பிடு” என்றாள்.

அதைக் கேட்ட மேனகா தனக்குக் கடவுளின் உதவி ஏற்படுமென்றும், தான் பழையபடி தனது கணவனுடன் திருப்திகரமாகச் சேர்ந்து வாழ்க்கை செய்தல் கூடுமென்றும் நம்பிக்கை கொள்ள வில்லையேனும், மருந்தைப் பருகியதனால் தனது வாய் முதலியவை அருவருப்பாகத் தோன்றின வாகையால், முகத்தை சுத்தி செய்து கொள்ள நினைத்தாள். எதிரிலிருந்த தண்ணீரை எடுத்து வாய், முகம், கை, கால்கள் முதலியவற்றை சுத்தி செய்து கொண்டு நாற்காலியிற்

மே.கா.II-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/19&oldid=1251483" இலிருந்து மீள்விக்கப்பட்டது