பக்கம்:மேனகா 2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

207

சொல்ல, முன்னரே அறிந்திருந்த சாமாவையர் உடனே நடைக்கு வந்து மந்திரவாதியைக் கண்டு நடைத்திண்ணையில் உட்காரும்படி அன்போடு அவரை உபசரிக்க, அவர் உடனே உட்கார்ந்துகொண்டார். ஐயரும் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து அதிலிருந்த மண்திண்டில் சாய்ந்து கொண்டு “நீர் எஜமானிடத்தி லிருந்தா வருகிறீர்?” என்றார்.

மந்திர:- ஆம்.

சாமா:- அவர் நாகைப்பட்டணத்துக்குப் போனதாக சொன்னார். நானே சமீப காலத்தில் அங்கே போயிருந்தேன். அவர் வரவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இப்போது எஜமான் எங்கே இருக்கிறார்? இங்கே வந்துவிட்டாரா அல்லது வெளியூரில் இருக்கிறாரா?

மந்திர:- அவர் நாகப்பட்டணத்துக்கே போகவில்லை. அங்கே போவதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டார். நான் மலையாளத்தில் இருஞாலக்குடா என்னும் ஊரில் இருப்பவன். நெடு நாளாய் அவருக்கும் எனக்கும் பழக்கமுண்டு.

சாமா:- அப்படியா! மலையாளத்தில் நீர் வர்த்தகம் செய்பவரா?

மந்திர:- எனக்கு வர்த்தகம் ஒன்றுமில்லை. நான் மந்திரவாதி.

சாமா:- ஒகோ! அப்படியா! ஆனால், அவர் இன்னமும் உம்முடைய ஊரில்தான் இருக்கிறாரோ?

மந்திர:- இல்லை இல்லை; இங்கே வந்து விட்டார்; ஒரு ரகசியமான இடத்தில் இருக்கிறார்.

சாமா:- அவரோடு இன்னம் யார் இருக்கிறார்கள்?

மந்திர:- ஒருவருமில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/208&oldid=1252382" இலிருந்து மீள்விக்கப்பட்டது