பக்கம்:மேனகா 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

19

கேட்க, நூர்ஜஹான், “ஆகா! என்ன வென்று சொல்லுவேன்! நாங்கள் உலாவி விட்டு வரும்போது பாதையில் ஒருவர் மீது மோட்டார் வண்டி ஏறிவிட்டது. அடடா! எவ்வளவு இரத்தம்! பாதை யெல்லாம் சேறாய்ப் போய் விட்டது. அதை கண்டவுடன் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. ஏது! இனி அந்த மனிதர் பிழைக்கமாட்டார்” என்றாள்.

அதைக் கேட்ட அலிமாபி திடுக்கிட்டு அச்சங்கொண்டு, “நம்முடைய வண்டியா ஏறியது?” என்றாள்.

நூர்ஜஹான், “இல்லை. வேறு வண்டி, நம்முடைய வண்டி அப்போது அருகில் வந்தது. நமக்கு ஏதாவது துன்பம் உண்டாகுமோ வென்று நினைத்து நாங்கள் வேகமாய் வந்துவிட்டோம். தவிர நியாயஸ்தலத்தார் இந்த விஷயத்தில் எங்களை சாட்சியங்களாகக் கோருவார்களானால், மேனகா கச்சேரிக்குப் போக நேரும்; அதனால் உபத்திரவம் உண்டாகு மென்றும் நினைத்து வண்டியை விரைவாக விடச் சொன்னேன். அந்த இரத்தத்தைக் கண்டவுடன் மேனகாவும் மயங்கி விழுந்துவிட்டாள். இப்போது விரைவாக துரைஸாணியை அழைத்துவந்து இதனால் மேனகாவின் உடம்பில் எவ்வித விபரீதமும் ஏற்படாமல் நாம் முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டும். நம்முடைய மோட்டார் வண்டியை அனுப்பு” என்றாள். அவள் உடனே வெளியிற் சென்று வண்டியை அனுப்பினாள்.

ஆறுமணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப்போன துரைஸானியை அதற்கு முன்னமாகவே அழைத்துவர நினைத்து, அவர்கள் தமது மோட்டார் வண்டியை ஐந்தேகால் மணிக்கு அனுப்பினார்களாயினும், துரைஸானி வரவில்லை; மணி ஆறாயிற்று . அப்போது அவள் தவறாமல் வந்துவிடுவா ளென்று நினைத்து நூர்ஜஹான் அவளது வருகையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/21&oldid=1251485" இலிருந்து மீள்விக்கப்பட்டது