பக்கம்:மேனகா 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

மேனகா

கொண்டு முத்தமிடவேண்டும்” என்ற வண்ணம், தமது தலைப்பாகையை ஒரு கையால் கீழே தள்ளி விட்டார்; இடையிலிருந்த கைலியையும் மேலே இருந்த அங்கியையும் கழற்றிப்போட்டார்; தமது இடையிலிருந்த ஒரு பேனாக்கத்தியால் முகத்திலிருந்த ஒரு கயிற்றை அறுக்க, அவரது நீண்ட தாடி உடனே பறந்து கீழே விழுந்தது. அவன் பைத்தியக்காரனா யிருப்பானோ வென்று அதுவரையில் நினைத்திருந்த அந்த யெளவன மாது, திகைப்பும் வியப்பும் அடைந்து அந்த வசிய ஜாலத்தில் ஈடுபட்டு மந்திரவாதியின் மீது உடனே மோகங்கொண்டவளாய் ஓடி வந்து மோகா வேசத்தோடு மந்திரவாதியின் மேல் பாய்ந்து அவரை அனைத்து முத்தமிட்டு, “சபாஷ்! நல்ல மந்திரவாதி! என்னை எவ்வளவு சீக்கிரமாக வசியப் படுத்திவிட்டீர்! முத்தம் முத்தமென்று பைத்தியம் பிடித்தலை கிறீர்? எத்தனை வேண்டுமானாலும் இதோ தருகிறேன்; எடுத்துக் கொள்ளும். அப்படியாவது என் புருஷன் வசியமாகட்டும்” என்று திரும்பவும் அவரை ஆலிங்கனம் செய்து கொள்ள, வேஷங் கலைத்த சமயசஞ்சீவி ஐயர் தமது மனையாட்டியின் சல்லாபங்களில், அகப்பட்டுக்கொண்டு திருட்டுவிழி விழிக்கிறார்.


★★★★★★★★★★


24வது அதிகாரம்

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

சாம்பசிவத்தைத் தேடி அழைத்து வரும்பொருட்டு ரெங்கராஜு செங்கற்பட்டிற்கு அனுப்பப்பட்டபிறகு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/217&oldid=1252392" இலிருந்து மீள்விக்கப்பட்டது