பக்கம்:மேனகா 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

மேனகா

பையனுடன் கதவைச் சாத்திக் கொண்டு சிறு பெண்ணாகிய நீ ஓயாமல் இருப்பதனாலேதான் அவனுடைய உடம்பு கெட்டுப் போய்விட்டது. முன்னால் நீ பங்களாவை விட்டுப்போனால் அவனுடைய உடம்பு ஒரு நிமிஷத்தில் சரியாய்ப்போகும். பையனுக்கு நல்ல பாலிய வயசு, அவனைக் கட்டிப் பிடிக்கவும், அவனைத் தொடவும் அன்னியப் பெண்ணாகிய உனக்குக் கொஞ்சமும் லஜ்ஜையே இல்லையே! இதுதான் என்ன ஜென்மம்!” என்று பெருந்தேவியம்மாள் குறும்பாகவும் அதட்டியும் மொழிந்தாள். அந்த கன்னக்கொடுரமான மொழியைக் கேட்ட பெண்மணி வராகசாமியின் அபாயகரமான நிலையைக் கருதி, தனது கோபப் பெருக்கை அடக்கிக்கொண்டு புன்னகை செய்து, “அம்மா! என்மேல் உங்களுக்கு எவ்வளவு கோபமிருந்தாலும் அதை அப்புறம் காட்டுங்கள்; சொல்வதை எல்லாம் அப்புறம் சொல்லுங்கள்; இப்போது உங்களுடைய தம்பியின் உடம்பு சரியான நிலைமையில்லை. சற்று நேரத்துக்குமுன் ஏதோ கடிதம் வந்ததே; அதைப் பார்த்த முதல் அவர் பெருத்த கோபத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறார். என்னோடும்கூட அவர் சரியாகப் பேசவில்லை. நீங்கள் அவரிடம் இப்போது போனால் பெருத்த கலகம் உண்டாகுமென்று தோன்றுகிறது. உங்களுக்கு இஷ்டமானால் போய்ப்பாருங்கள். ஏன் வந்தோமென்று பிறகு நீங்களே விசனப்படுவீர்கள்; எனக்கென்ன அதிகாரமிருக்கிறது. நான் கூலிக்காரி, உங்களுடைய நன்மைக்காக வேலை செய்கிறவள். உங்கள் மனம் போல செய்யுங்கள்” என்று பணிவாகக் கூறினாள்.

அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள், “அந்தக் கடிதம் யாரிடத்திலிருந்து வந்தது? இப்படி அவன் கோபிக்கும்படி அதில் என்ன சங்கதி இருந்தது?” என்றாள்.

அதைக்கேட்ட பணிமகள், "விவரமொன்றும் எனக்குத் தெரியாது. காணாமல்போன சம்சாரத்தைப்பற்றிய சங்கதியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/275&oldid=1252451" இலிருந்து மீள்விக்கப்பட்டது