பக்கம்:மேனகா 2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

289

யினும், விபச்சாரத்தில் மாத்திரம் நாட்டமில்லாத சுத்தனென்பதை அவர்கள் சந்தேகமற உணர்ந்தவராதலின், அப்படிப் பட்ட நிர்ணயமுள்ள மனிதன் தனது தேகம் கேவலமான நிலைமையில் இருக்கும்போது வெள்ளைக்காரப் பெண்ணோடு சரச சல்லாபம் செய்துகொண்டிருப்பானோ வென்று அவர்கள் பெரிதும் திகைப்படைந்தனர்; பெருந் தேவியும், கோமளமும் வெள்ளைக்காரப் பெண்ணின் மீது கரைகடந்த ஆத்திர மடைந்து அவளைத் தண்டிக்கப்போனது நியாயமென்றே நினைத்து அவர்களும் ஆத்திரத்தோடு வாளா நின்றுகொண்டிருந்தனர். பெருத்த பேய்களைப்போல பணிமகளின்மீது பாய்ந்த சகோதரிகள் இருவரும் பேரிடி முழக்கம் செய்து அவளைத் தாறுமாறாக வைது வருத்த முயன்றனர். அவளது சிரசிலிருந்த தொப்பியை கோமளம் தட்டி விடவே, அது நெடுந்துாரத்திற் கப்பால் போய் விழுந்தது. பெருந்தேவியம்மாள் கையை ஓங்கி அந்தப் பெண்ணின் கன்னத்தில் இடித்துவிட்டு, மெல்லிய மஸ்லின் துணியால் அழகாகத் தைக்கப்பட்டிருந்த அவளது வெள்ளைக்கார உடையைக் கையால் பிடித்திழுத்து, அவளை உதைக்கத் காலைத் துக்கினாள்,

அவ்வாறு அவள் செய்த கொடுமையைக் கண்ட வராகசாமி அடக்க இயலாத ஆத்திரமும் வீராவேசமுங் கொண்டு, “அடி கோமளம்! அவளிடம் போகாதேயுங்கள். அவளைத் தொட்டால் கையை வாங்கி விடுவேன்; போகவேண்டாம்; வாருங்கள் இப்படி” என்று ஓங்கி அதட்டிக் கூச்சலிட்டவனாய்த் தனது சயனத்தை விட்டு எழுந்திருக்க முயன்றான். ஆனால், அவனால் எழுந்திருக்கக் கூடவில்லை. சகோதரிகளோ அவனது சொல்லைக் காதில் வாங்காமல் பணிப்பெண்ணை மேன் மேலும் வருத்தியதைக் கண்ட வராகசாமியின் கோபமும் ஆவேசமும் ஒன்றுக்கு நூறாய்ப்

மே.கா.II-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/290&oldid=1252466" இலிருந்து மீள்விக்கப்பட்டது