பக்கம்:மேனகா 2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

307

தனமான காரியம் செய்து விட்டார்கள். டிப்டி கலெக்டருடைய தாயார் கனகம்மாளுக்கு செங்கல்பட்டி லிருந்து ரெங்கராஜு என்ற ஒருவன் அனுப்பி யிருக்கிறான்; அந்த அம்மாளிடம் இதைச் சேர்த்துவிடுங்கள் என்று கூறியவண்ணம் கடிதத்தை வராகசாமியிடம் கொடுத்தார். “அந்த அம்மாள் இதோ இருக்கிறார்கள். நான் கொடுத்து விடுகிறேன்; இந்த ஆளை இருக்கச் சொல்லுங்கள் என்று கூறியவண்ணம் வராகசாமி அதை வாங்கிக் கொள்ள, சஞ்சீவி ஐயர் வெளியிற் போய்விட்டார். வராகசாமி இருந்த அறையில் அப்போது கனகம்மாள், தங்கம்மாள், மேனகா ஆகிய மூவருமே ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றமையால், சஞ்சீவி ஐயர் போனவுடன் மேனகா விரைவாக ஓடிவந்து வராகசாமி இடத்திலிருந்து கடிதத்தை வாங்கினாள். செங்கற்பட்டிலிருந்து ரெங்கராஜு வால் எழுதப்பட்ட கடிதமென்பதைக் கேட்ட முதல் அதைப் பார்க்க ஆவல் கொண்டு துடிதுடித்து நின்ற கனகம்மாள், தங்கம்மாள் ஆகிய இருவரும், அதைப் படிக்கும்படி மேனகாவையே கேட்டுக்கொள்ள, அவள் வீணா நாதம் போன்ற தனது தீங்குரல் இனிமையைச் சொரிய அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் படித்தாள்:

கடிதம்

“பெரியம்மாள் பாதங்களில் சேவக ரெங்கராஜு அநேக கோடி தெண்டனிட்டு எழுதும் செய்தி:- நான் இதற்கு முன் செய்கற்பட்டு ரயிலடியிலிருந்து எழுதி யனுப்பிய கடிதம் தங்ளிடம் வந்திருக்கலாம். நான் பகற்கொள்ளைப் பாக்கத்துக்குப் போனதையும், செட்டியாரிடம் சங்கதிகளை யறிந்துகொண்டு மறுபடியும் செங்கற்பட்டிற்கு வந்ததையும், எஜமானரின் அங்கவஸ்திரம் மாத்திரம் அகப்பட்டதையும், போலீஸார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு எஜமானரைத் தேடிக்கொண்டிருந்த விஷயங்களையும் அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/308&oldid=1252484" இலிருந்து மீள்விக்கப்பட்டது