பக்கம்:மேனகா 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மேனகா

பார்த்துப் புன்னகை செய்து கொண்டனர்.

உடனே சாமாவையர், “அடே வரதாச்சாரி! நீ பலே சாமர்த்தியசாலியடா ஒரு நிமிஷத்தில் ரூபாய் ஐநூறு தட்டிவிட்டாயே! உன்னுடைய உத்தியோகம் நல்ல உத்தியோகம்” என்றார்.

வரதாச்சாரி நன்றியறிவைக்காட்டி, “எல்லாம் நீ கொடுக்கும் பிச்சையல்லவா? உன் பெயரைச் சொல்லிப் பிழைக்கிறோம்; இனி மேலும் உன்னாலேயே பிழைக்க வேண்டும். உன்னுடைய கடிதம் நேற்றுக் காலையில் வந்தது. உனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை யாரிடம் சம்பாதிக்கலாமென்று பார்த்தேன். இந்தக் கிழவி காவிரி யாற்றங்கரைப் பாலத்தடியில் ஆப்பம் சுட்டு விற்பவள். அந்த வழியாக நான் போகும்போதெல்லாம் இவள், “சுவாமி! தெண்டம்” என்று ஒரு கும்பிடு போடுவாள். நான் வட்டிக்குப் பணம் வாங்குகிறவனென்பதை யறிந்துகொண்டே இவள் அப்படிச் செய்துவந்தாளென்றும், இவளிடம் பணம் இருக்கிற தென்பதையும் நான் யூகித்துக்கொண்டேன். பக்த சிரோன்மணியான இவள் காணிக்கை வைத்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுதல் செய்வதை மறுப்பது பாவமல்லவா? “சுவாமி! தண்டம்” என்று இவள் சொல்லும் போதெல்லாம், “கவலைப்படாதே! ஒருநாளைக்கு தெண்டம் வைக்கிறேன்” என்று நான் நினைத்துக்கொண்டு போவதுண்டு. இவள் நல்ல சமயமாக இன்று வந்து உதவினாள். அது இருக்கட்டும், வராகசாமிக்கு இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?” என்றார்.

சாமாவையர் :- முக்கால் பாகம் குணமடைந்துவிட்டான்; அவனை வீட்டுக்கு அனுப்பும்படி நாம் இப்போது விரும்பினாலும் வைத்தியசாலை அதிகாரிகள் அவனை அனுப்பத் தடையில்லை. ஆனால், நல்ல காற்று ஒட்ட முள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/36&oldid=1251849" இலிருந்து மீள்விக்கப்பட்டது