பக்கம்:மேனகா 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

61

மாட்டாள். ஆகையால், அவர் எவ்வித முடிவிற்கும் வர மாட்டாமல் தவிர்த்தார். ஒருகால் அவள் குடும்ப ஸ்திரீயில் வேசையோ என்று சந்தேகித்தார். திரும்பவும் கேள்வி கேட்கத் தொடங்கினார். “ஏனம்மா! இந்த வண்டி திருவாரூர் போனவுடன் அங்கிருந்து நாகைப்பட்டணத்துக்கு வேறே வண்டி புறப்படுகிறதா?” என்றார்.

அந்தப் பெண், “இல்லை. இந்த வண்டி ஒரு மணிக்குத் திருவாரூர் போகிறது. அங்கிருந்து விடியற்காலம் ஐந்து மணிக்குத்தான் நாகைப்பட்டணத்திற்கு வேறே வண்டி புறப்படுகிறது” என்றாள்.

அதைக் கேட்ட ஐயர் பெரிதும் துன்பமடைந்த வரைப்போல நடித்து, “அப்படியானால் நான் விடியற்காலம் ஐந்து மணி வரையில் கண் விழித்துக் கொண்டு ரயிலடியிலே தான் உட்கார்ந்திருக்க வேண்டும். அடாடா பெருந் துன்பமா யிருக்கிறதே! இந்தச் சங்கதி முன்னமே தெரிந்திருந்தால் பகல் வண்டியி லாகிலும் வந்திருக்கலாமே, கையில் பணமூட்டை யிருக்கிறது. ஸ்டேஷனில் திருடர் பயமிருந்தாலும் இருக்கும்” என்றார்.

அவர் அவ்வாறு பேசியபோது அவரது கால் விரல்களும் சுறுசுறுப்பாக ஊமை ஜாடைகள் காட்டி அவளது விரல்களுடன் தந்தி பேசின. பெண் தனது காலை இழுக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு, “ஆம் ரயிலடியில் திருடர் பயமும் அதிகம்; மூட்டை பூச்சிக் கடியும் அதிகம். படுக்கவும் சுகமான இடமில்லை. தங்களுக்கு விருப்பமானால், எங்கள் வீட்டுக்கு வரலாம்; ஐந்து மணி வரையில் வசதியாகவும், பத்திரமாகவும் படுத்துவிட்டு ரயிலுக்கு வரலாம்; என்னுடைய தாயார் சரியான காலத்தில் தங்களை எழுப்பி விடுவாள்” என்றாள். எத்தனை யுகம் தவம் செய்தாலும் காணக்கிடைக்காத உன்னதமான அழகையுடைய அந்த மங்கை தம்மோடு அவ்வளவு பட்சமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/62&oldid=1251897" இலிருந்து மீள்விக்கப்பட்டது