பக்கம்:மேனகா 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மேனகா

பெருத்த அல்லல்களின் திரள்களினால் உலப்பப்பட்டு மிக்க சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தது. மாறி மாறி ஹுக்காவுடன் சம்பாஷணை செய்வதும், எதிரிலிருந்த ஒரு நாற்காலியில் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்த நூர்ஜஹானிடம் ஏதோ விஷயங்களைப் பற்றி மொழிவதுமாய் இருந்தார்.

பெரியதம்பி மரக்காயர்:- எல்லாம் சரிதான்; வி.பி. ஹாலில் நாடகம் பார்க்க அழைத்துக்கொண்டு போவதாய் குமாஸ்தா சாமாவையரும், வக்கீலின் அக்காளும் பாசாங்கு செய்து, அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள நமது வீட்டிற்குத் தன்னை அழைத்துக்கொணர்ந்து, இரகசியமான ஒரு அறையில் விட்டதாக இந்தப் பெண் சொன்னாள் என்றாயே, இவள் அங்கு வந்ததை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?

நூர்:- அறையில் விட்டபிறகு குமாஸ்தாவும், வக்கீலின் அக்காளும் மிகவும் அவசரமாக அறைகளின் வழியாய் நுழைந்து வெளிப்பட்டதை தற்செயலாக அக்காள் பார்த்துவிட்டாள். உடனே அவளுக்குப் பெருத்த சந்தேகம் தோன்றிவிட்டது. விஷயத்தை என்னிடம் வெளியிட்டாள். நான் முதலில் இதைப் பற்றி எவ்விதமான கெட்ட யூகமும் செய்யவில்லை. என்றாலும் அன்னியரான அவர்கள் இரவு ஒன்பது மணிக்கு நமது வீட்டிற்குள் வந்ததும், மிகவும் அச்சங் கொண்டவரைப்போல விரைந்தோடியதும் ஆச்சரியத்தை உண்டாக்கின. ஆகையால், நானும் அக்காளும் மெல்ல நடந்து உட்புறத்திலுள்ள அறைகளை யெல்லாம் பார்த்துக்கொண்டு போனோம். ஓர் அறையின் கதவுகள், யாவும் வெளிப்புறத்தில் தாளிடப் பட்டிருந்தன. ஆனால், அதற்குள் வெளிச்சமும் மனிதர் சம்பாஷித்த குரலும் உண்டாயின. நாங்கள் சந்தேகப்பட்டு கதவுகளின் இடுக்கால் உட்புறம் பார்த்தோம். இந்தப் பெண் தனிமையில் நின்று தவித்துக்கொண்டிருந்தாள். உங்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/85&oldid=1251936" இலிருந்து மீள்விக்கப்பட்டது