பக்கம்:மேனகா 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயசஞ்சீவி ஐயர்

93


அடுத்த நிமிஷத்தில் மரக்காயர், “ஐயரே! இன்று காலையில் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் உம்முடைய ஸ்டேஷனுக்கு வந்தாரா?” என்றார்.

அதை கேட்ட சஞ்சீவி ஐயர் மேலும் துணிவடைந்தவராய், “ஆம் வந்தார்” என்றார்.

பெரிய:- என்ன காரியமாக வந்தார்?

சஞ்சீ:- நேற்று ராத்திரி தஞ்சாவூர் கலெக்டரிடமிருந்து போலீஸ் கமிஷனருக்கு ஒரு தந்தி வந்தது; டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் இன்று காலையில் எழும்பூரில் இறங்கி, தொளசிங்கபெருமாள் கோவில் தெருவிலுள்ள வக்கீல் வராகசாமி ஐயங்கார் வீட்டிற்கு வருவாரென்றும், அவர் ரஜா இல்லாமல் இரண்டு முறை பட்டினத்திற்கு வந்த குற்றத்திற்காகவும், பொய்யான செலவுப் பட்டி தயாரித்து சர்க்கார் பணத்தை வாங்கிக்கொண்ட குற்றத்திற்காகவும், லஞ்சம் வாங்கின குற்றத்திற்காகவும், தமது விசாரணை முடியும் வரையில் அவரை வேலையிலிருந்து நீக்கி வைப்பதாகவும் அவர் உடனே தஞ்சாவூருக்கு வந்து தமது சீல் முகர் முதலியவற்றை கஜானா டிப்டி கலெக்டரிடம் ஒப்புவிக்க வேண்டுமென்றும், இந்தச் செய்தியை கமிஷனரே நேரில் அவருக்கு அறிவித்து அவரிடம் கையெழுத்துப் பெறவேண்டு மென்றும் அந்தத் தந்தியில் கலெக்டர் எழுதியிருந்தார். நான்கு நாள்களுக்கு முன் அவர் இந்த ஊருக்கு வந்து தம்முடைய பெண்ணை ரகசியமாக அழைத்துப்போனாராம்; அதன் விவரத்தைப் பற்றி வக்கீல் வீட்டிலும் விசாரணை செய்து; கிடைக்கக் கூடிய சாட்சியத்தையும் அனுப்பும்படி தந்தியில் கமிஷனருக்குத் தனியாக கலெக்டர் எழுதியிருந்தார். நான் இன்று காலையில் அவர்களுடைய வீட்டில் போய் விசாரணை செய்தேன். டிப்டி கலெக்டர் நான்கு நாள்களுக்கு முன் வந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/94&oldid=1251965" இலிருந்து மீள்விக்கப்பட்டது