பக்கம்:மேரியின் திருமகன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

அங்கு ஆர்ப்பாட்டம் போர்ப்பாட்டாயிற்று
வேந்தன் மனம் நொறுங்கிச் சொன்னான்
ஆரவாரத்தில் அநீதி நீதியாவதில்லை.
நல்லவன் சாவுக்கு நான் பொறுப்பல்ல
உங்கள் முடிவுக்கே விடுகிறேன் என்றான்
கொலைகாரன் பரபாசுக்கு விடுதலைக் கேட்டனர்
கிறிஸ்துவுக்குச் சிலுவை சிலுவை என்றனர்
ஆமென்றான் ஆண்டவர் மேல் சாட்டைகள்
அழியாத கோலமாக அடையாள மிட்டன
அப்போதும் அவர்கள் அறியாமைக்கு இரங்கினார்
சாத்தான் வேதம் ஓதியது அந்தோ
தர்மம் தலை குனிந்தது, அம்மா !
ஆண்டவர் நிமிர்ந்து நடந்தார் ஆங்கே

கல்வாரிப்பயணம்

சிலுவையை ஏசுவின் தோளிலே ஏற்றி
கல்வாரி மலைக்கு நடத்திச் சென்றனர்,
ஆண்களும் பெண்களும் அழுதபடி தொடர்ந்தனர்
எருசலேம் மனிதரே எனக்காக அழாதீர்
உங்களுக்காக உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள்
ஒருநாள் வரும் அன்று மலடி பேறுபெற்றவள்
பச்சை மரத்துக்கே இந்த பாடென்றால்
பட்டமரத்துக்கு என்ன கேடோ என்றார்
அடித்து நடத்தினர். உலகின் பாவத்தை