உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 79

சம்பவம் நடந்தது. டெல்லி சட்டசபையில் இந்து சட்ட சீர்திருத்தத்தைப் பிரபல தேசீயவாதிகள் தடுத் தனர். இந்த சட்டத்தைத் திருத்துவதையே அவர்கள் விரும்பவில்லை. ஆனால், இந்து சட்டமே நமக்கு ஏற்றதல்ல. டெல்லி சட்ட சபையில் வடநாட்டார் பெரும்பான்மை; நாம் சிறுபான்மை. மற்றும், அவர் கள் கலை, மொழி, நாகரிகம், இனம், நடை, உடை யாவற்றிலும் நம்மினின்றும் மாறுபட்டவர்கள். எனவே, நம் நாடு தனியே பிரிந்திருந்தால்தான் நாம் தனித்து, நம் குறிக்கோள்களுடன் வாழமுடியும். தோழர்களே! இறுதியாக, உங்களுக்கு விடும் வேண்டுகோளைக் கேட்டுச் சிந்தனை செய்து பின்பற் றுங்கள்! மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, நம் குறிக்கோள் குன்றாதிருக்க, உழைப்பாளி உண்டு களிக்க, உலுத்தர் ஒழிய ; ஆண்டவன் பேரால் ஆபாசம், அநீதி, சுரண்டல் சூது நடவாதிருக்க, ஆங்கிலனின் அரசியல் சூழ்ச்சியி லிருந்தும் ஆரியனின் ஆத்மார்த்தினின்றும் வடநாட்டு வாணிபப்பிடியினின்றும் விலகி, மனிதர்மனிதர்களாய் வாழ வழியிருக்கும் நாட்டைப் பெறவேண்டும் என்று கொட்டுங்கள்போர்முரசு; சிந்தனைசெய்துசீர் தூக்கிப் பார்த்துச் செயலில் காட்டுங்கள்! உங்களுக்கு எனது நன்றி.