பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கறுப்புக் கபிலர் 179 தொகைகளும் கொடுத்தனர். இதனுடன் தேசியக் கட அக்கும் பெரும் பணம் சேர்ந்தது. இக்காலத்தில் ஆச்சரியமான ஒரு சம்பவம் நடை பெற்றது. ஆங்கிலத் தளகர்த்தரான பிரிகேடியர் ஜென ரல் லூகாஸ், வேறு இரண்டு அதிகாரிகளுடன் மீன்பிடித் அதுக்கொண்டிருக்கையில், கார்க் நகரத் தொண்டர் தலை வர் கால்வர் அவரைப் பிடித்துக்கொண்டு போய், யுத்தக் கைதியாகச் சிறைவைத்து விட்டனர். பெரிய தளகர்த்தர் ஒருவர் தொண்டரால் சிறை வைக்கப்பட்டிருக்கிருர் என்ற விஷயம் இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. லூகாஸ் பெர்மாய் நகரில் வேலைபார்த்தவ ராதலால், அவர் பிடிக்கப்பட்ட மறுநாள் இரவு 400 சிப்பாய்கள் அக்கர் விதிகளில் புகுந்து, முக் கியமான வர்த்தக ஸ்தலங்களே எல்லாம் கொள்ளேயடித் அதுப் பாழாக்கினர். பல்லாயிரம் பவுன் பெறுமதியுள்ள சொத்துக்களேக் கொள்ளேயிட்டனர். அச்சிப்பாய்கள் ஆயுதம் தாங்கி யிருக்கவில்லை என்பதை அறிந்து சில தொண்டர்கள் அவர்களே எதிர்த்துத் துரத்தினர்கள். அதே இரவில் விஸ்மோர் நகரமும் ராணுவத்தால் தாக்கித் தகர்க்கப்பட்டது. லூகாஸ், ஒரு மாதம் சிறையிலிருந்து, பின்னர் தப்பி யோடிவிட்டார். அடைக்கப்பட்ட இடத்திலிருந்து வெளி யேறி, ரஸ்தா வழியாக அவர் சென்றுகொண்டிருக்கை யில் பட்டாளத்தாருடைய மோட்டார் ஒன்றைச் சந்தித்து, அதில் ஏறிக்கொண்டார். தற்செயலாகச் சில தொண்டர் கள் ஊலா என்ற இடத்திற்குச் சமீபத்தில் அந்த மோட் டாரை மறித்துச் சுட்டனர். அரை மணி நேரமாக அங்கு கடந்த போராட்டத்தில் இரண்டு சிப்பாய்கள் இறந்தனர்;