பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் நிறுத்தம் 239 வாறு எச்சரிக்கை செய்தான்: தளகர்த்தன் வீன் மக்கியோன் விடுதலை செய்யப்பட்டாலன்றி டெயில் ஐரான் கூட முடியாது. அவனே விடுதலை செய்ய மறுப் பது தாற்காலிக சமாதானத்தை அரசாங்கம் உடைக்ச வேண்டும் என்று ஆவலுற்றிருப்பதைக் காட்டுவதாகத் தோன்றுகிறது. இந்த எச்சரிக்கையின் பயனுக அன்று மாலையே மக்கியோன் மெளண்ட்ஜாய் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். டெயில் ஐரான் முதலில் அந்தரங்கமாய்க் கூடி ஆலோசித்துவிட்டுப் பி ன் ன ர் வெளிப்படையாகக் கூடிற்று. வழக்கம்போல் மான்ஷன் மாளிகையில் ஜனங் கள் பெருந் திரளாகக் கூடியிருந்தனர். காலின்ஸ் அப் பொழுதுதான் வெளிப்படையாகத் தோன்றின்ை. அது வரை அவன் முகத்தைப் பார்த்திராதவர்கள், இரண்டு வருஷ காலமாய் அரசாங்கத்தைத் திணற வைத்த அம் மாயனுடைய முகம் எப்படி இருக்கும் என்று தாங்க ளா கப் பலவிதமாய்க் கற்பனே செய்துகொண்டிருந்தனர். ஆல்ை, அவனே கேரில் கண்ட பின்பு, புன்னகை தவ குழும் முகத்துடன் கூடிய இந்த இளேஞன இத்தனே நாள் வல்லரசை ஆட்டிவைத்தான் ! என்று அவர்கள் வியப் புற்றனர். காலின்ஸ்-க்கு ஜனங்கள் செய்த மரியாதை களுக்குக் கணக்கில்லை. அவன் புகழைக் கூருதா ரில்லே. தேர்தலுக்குப் பின்னல் இதுவே டெயில் ஐரானின் முதற் கூட்ட மாதலால், மீண்டும் டிவேலரா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிபித், காலின்ஸ், கதால் புருகா, காஸ்கிரேவ், ஸ்டாக், பார்ட்டன் ஆகியோர் மந்திரி சபையின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டனர்.