பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்படிக்கை 247 களுக்கு உதவியாக வேலைக்காரர்களும், காரியதரிசிகளும் அயர்லாந்திலிருந்தே வந்திருந்தனர். சமாதான மகாநாட்டின் முதற் கூட்டம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி பகல் 11 மணிக்கு டெளனிங் தெருவில் கூடிற்று. மகாநாட்டின் ஆரம்பத்திலேயே திகைப்பை உண்டாக்கும் ஒரு சம்பவம் நேர்ந்தது. ஐரிஷ் பிரதிநிதி கள் தாங்கள் ஸ்ர் ஹமார் கிரீன்வுட்டுடன் கைகுலுக்க முடியாது என்று லாயிட் ஜார்ஜ-க்கு முன்கூட்டியே அறிவித்தனர். கிரீன்வுட் அயர்லாந்துக்குச் செய்த கொடுமைகளெல்லாம் முன்னுல் விவரிக்கப்பட்டிருக்கின் றன. அவருடன் ஐரிஷ் தேசியவாதிகள் கைகுலுக்கு வதற்கு மறுத்தது இயற்கையேயாகும். லாயிட் ஜார்ஜ், ஆரம்பத்திலேயே மனக் கசப்பை விளைவிக்கும் இக்காரி யம் கிகழாம லிருப்பதற்கு, ஒரு தந்திரம் செய்தார். பேசக்கூடிய அறையின் நடுவேயுள்ள பெரிய மேஜையின் முன்னுல் அவர் கின்றுகொண்டு, முதலாவது ஐரிஷ் பிரதிநிதிகளே மேஜையின் ஒரு பக்கத்திற்கு அனுப்பி விட்டு, ஆங்கிலப் பிரதிநிதிகளைப் பின்னல் வரவேற்று மேஜையின் மறுபக்கத்திற்கு அனுப்பினர். அதன் பின் னர், அவர் இருகட்சியினரையும் ஒருவருக்கொருவர் அறி முகம் செய்து வைத்தார். இந்தத் தந்திரத்தில்ை பிரதி நிதிகள் ஒருவரை யொருவர் கைகுலுக்கவேண்டிய அவசி யமே இல்லாமற் போயிற்று. இரு கட்சியாருக்கும் பொதுவான அக்கிராசனரை கியமித்துக் கொள்ளாமல், ஐரிஷ் பிரதிநிதிகள் கிரிபித் தைத் தலைவராகவும், ஆங்கிலப் பிரதிநிதிகள் லாயிட் ஜார்ஜைத் தலைவராகவும் நியமித்துக்கொண்டனர்.