14
மொழிப் போராட்டம்
ஆசிரியர் மறைமலையடிகளார் தலைமையில் கூடிய மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பல்வேறு கட்சியினரும் ஒன்று கூடி ஒருமித்த எதிர்ப்புக் கண்டனத்தைப் பேச்சின் மூலமாகவும், தீர்மானத் தின் மூலமாகவும் காட்டினர். மாநாட்டில் குழுமி யிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் 'இந்தி ஒழிக' 'தமிழ் வாழ்க' என்ற ஒலிகளை இடி முழக்கமென முழங்கினர். மாணவர்கள் மாகாண மாநாட்டைக் கூட்டி இந்தியைப் படிப்பதில் தங்க ளுக்கு விருப்பமில்லை என்றும், அதன் நுழைவு பல வகைகளிலும் கேடு பயப்பதாகும் என்றும், இந்தி எந்த உருவிலும் பள்ளிகளில் பாடமாக்கப்படக் கூடாது என்றும் அரசியலார்க்குத் தெளிவாக அறிவித்துவிட்டார்கள். தமிழ்ப்புலவர் மாநாட்டி லும் இந்தியின் வருகை கண்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினரை அதிகமாகக்கொண்ட தமி ழரசுக் கழகத்தினர் கஷ்டப்பாடமாகவோ, இஷ் டப் பாடமாகவோ இந்தி வரக் கூடாதெனப் போராட்டம் துவக்கப்போவதாக அறிவித்து விட் டனர். இறுதியாக திராவிடக் கழகச் செயற் குழு திட்டத்தின்படி பெரியார், ஈ. வெ. ரா. தளபதி அண்ணுத்துரையை ஆணையாள ராகக்கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவக்கப்பட்டது. போராட்டப் புயல் ஊர்தோறும், பள்ளிதோறும் வீசத்தொடங்கிற்று. மறியல் களங்கள் ஆங்காங்கு காணப்பட்டன. அதன் காரணமாக இன்றுவரை ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டுள்ளனர்.
தலைமையில்