உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை

17

இரண்

கான காரணம் காட்டியிருக்கவேண்டும். டும் செய்யப்படவில்லை. ஏன் இவ்வளவு குழப்பம், சஞ்சலம், தயக்கம், திடீர் மாறுதல்?

அத்துடனாவது குழப்பநிலை நின்றதா? இல்லை. தமிழ் நாட்டிற்கும் இந்தித் திட்டத்தைக் கட்டாயப் படுத்த முடிவு செய்த பின்னுங்கூட கல்வி மந்திரி யாருக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரிய வில்லை. ஒரு வாரத்திற்குள்ளாக வானொலியில் பேசும்போது, இந்திமொழி கற்பது தமிழ் மக்களுக்குச் சங்கடமே எனக் கல்வி மந்திரியார் தெரிவித்தார். ஏன் இந்த சஞ்சலம்?

தயக்கம் மந்திரி சபையை மட்டுமல்ல, ஆதரிப் பாளர்களையுங்கூட ஆட்டி வைக்கிறது. அரசிய லாரின் திட்டத்திற்கு எதிர்ப்பு என்றதும் 'உடனடி யாக ஒடுக்கவேண்டும்' என்று கூக்குரலிடும் தேசீய இதழ்கள் "பொறுத்துப் பார்க்கவேண்டும், அவ சரப்பட்டு விபரீதத்தை உண்டாக்க வேண்டாம் என்று மந்திரி சபைக்கு உபதேசம் செய்வதன் காரணம் என்ன ?

இந்தி எதிர்ப்பில் கண்ணியம் பொருந்திய சில காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளுகிறார்கள் என்றவுடன் சீறிடும் பாம்பென வெகுண் டெழுந் தன காங்கிரஸ் கமிட்டிகள், எதிர்ப்பில் கலந்து கொள்ளுகிற காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானித்தன. அந்தக் காங்கிரஸ்காரர்கள் மீது வழக்கு தொடுத்து, 'குற் றக்கூண்டிலே' கொண்டுவந்து நிறுத்தி, நட

2