உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய மொழியா ? பொது மொழியா? 21

தயங்கான். அதைவிட "அவன் தான் யோக்கி யன்", என்றோ “அவன்தான் புத்திசாலி", "அவன் என்றோ கூறினால் முடிவு இன்னும் வேறுவிதமாக அமையும்.

தான்

ஒழுக்கமுடையவன்"

அவன் ஒரு மனிதன் என்று கூறுவதுபோல, இந்தி ஒரு தேசிய மொழி என்று அறிவிக்கப்படு மானால் எதிர்ப்பு உண்டாவதற்கு இடமில்லை; அக் உற்றுபற்றி அலட்சிய மனப்பான்மையே ஏற் படும். இந்தி ஒரு தேசிய மொழி என்று விளம் பரப்படுத்த அரசியல் மேடையோ, பிரச்சாரசபை களோ தேவையில்லை. இந்திய மொழிகள் பற்றிய அட்டவணையில் இந்தி மொழி இடம்பெற்றிருந் தாலே போதும். அதைக்கண்டு இந்தி ஒரு இந்திய தேசிய மொழி என்று எளிதில் யாரும் அறிந்து கொள்ளலாம்."இந்திதான் இந்தியாவின் தேசியமொழி. இந்தியா முழுமைக்கும் இந்திதான் தேசியமொழியென ஏற்றுக்

கொள்ளப்படவேண்டும்" என்று வலியுறுத்தும் பொழுதுதான் ஏனைய மொழியாளர்களிடமிருந்து எதிர்ப்பு மூளுகிறது.) இந்திதான் தேசிய மொழி யாகும் என்றால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம், உருது, குஜராத்தி, வங்காளி போன்ற சிறப்புடைய மொழிகள் தேசிய மொழிகளல்லவா? இந்தி ஒன்றே தேசிய மொழி என்று கூறுவதா னால் மற்றவற்றின் நிலை என்ன ? அந்த மொழி கள் மறைந்து போவதா? அல்லது அவற்றை வழங்கும் மக்கள்தாம் மாண்டுபோவதா?

இந்திய தேசியமொழி என்று கூறும் பொழுது இந்தியாவிற்குச் சொந்தமான மொழி, இந்தியாவி