உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மொழிப் போராட்டம்

மிஞ்சி நிற்கும். வரலாறுகள் பிரிந்தும், சிதறியும் கிடக்கின்றன. கலாச்சாரங்கள் ஒன்றோடொன்று மோதுகின்றன. மொழி வேற்றுமைகளோ எண் ணத் தொலையா. ஓரிடத்தில் காணப்படும் பழக்க வழக்கத்திற்கும் அதனருகில் அதே நிலையில் காணப்படும் பழக்க வழக்கத்திற்கும் பகுத்துணரும் அளவுக்கு வேறுபாடு. இந்த நிலையில் இந்தியாவை ஒரே தேசமென நினைத்து, அதற்கான பண்பு களைச் செயற்கை வழிகளால் காட்டி, அதற்கென தேசிய மொழி ஒன்றைத் தயாரிக்க விரும்புவது, சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளை ஒன்று சேர்த்து ஒட்டி, முகம் பார்க்க விரும்பும் தன்மையை ஒப்பதாகும்.) அதில் முகமும் சரியாகத் தெரியாது; ஒட்டப்பட்ட துண்டுகளும் நீண்ட நேரம் ஒட்டிய நிலையிலேயே இருக்கா.

அடுத்தபடியாகப் பொதுமொழி என்னுங் கூற்

றைக் கவனிப்போம். மொழிப் பிரச்சினையை ஆரம்பித்த காங்கிரஸ் தலைவர்களும், ஆதரிப்பாளர் களும் 'தேசிய மொழி,' 'பொது மொழி' என்ற சொற்றொடர்களைப் பாகுபாடின்றியே வழங்கி வந் துள்ளனர். இரண்டு சொற்றொடர்களும் ஒன்றோ டொன்று குழம்பிய நிலையிலேயே சொல்லப்படு கின்றன. 'தேசிய மொழி' என்று கூறும்போது பலதிறப்பட்ட மொழி, பழக்க வழக்கம், பண்பாடு வரலாறு ஆகிய வேறுபாடுகளைக் கவனிக்க மறுத் தாலும், 'பொது மொழி' என்று கூறும்போது, பல மொழிகள் வழங்குகின் றன என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். பொதுமொழி ஒன்று