மொழிப் போராட்டம்
பத்து ஆண்டுகள் உருண்டோடிய பிறகு அறிவு மீண்டும், மொழிப் போராட்டம் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.
1938-ல் சென்னை மாகாணத்தில், காங்கிரஸ் கட்சியினர் மந்திரி சபையிலிருந்தபொழுது, இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக நடுத்தரப் பள்ளிகளில் வைத்தனர். அரசியலாரின் அந்தப் போக்கு கல்விமுறை பற்றிய சிறு மாறுதலாகக் கருதப்படவில்லை; தமிழ் நாட்டிற்குப் பொருந்தாத ஒரு செயலாகவே கருதப்பட்டது. தமிழ் மொழி அறிஞர்களும், மொழியாராய்ச்சியாளர்களும் அதை எதிர்த்தனர். இந்தி மொழி கட்டாயம் என்றதும் அப்பொழுது கரூர் அறிவுதயக் கழக ஆசிரியராக விளங்கிய ஈழத்துச் சிவானந்த அடிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் ச. சோமசுந்திர பாரதியார், பல்லாவரம் பொது நிலைக்கழக ஆசிரியர் மறைமலையடிகள், பல்கலைப் புலவர் கா. சுப்பிரமணியபிள்ளை, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள், த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, பெரும் பேராசிரியர் உ. வே. சாமினாதையர் முதலாயினோர் அரசியலாரின் கொள்கையைக் கண்டித்-