உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட நாட்டில் மொழிச் சண்டை

41

தயானந்தர் ஆரம்பித்த இந்துமத தர்ம பிரசார மும் வலுத்தது. வேதத்தின் மகிமையும், சமஸ்கிரு தத்தின் பெருமையும் | பேசப்பட்டன. இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக சமஸ்கிருதம் விளங்குகிறது என்ற எண்ணம் ஏற்பட்டதும், அய லார் மொழிகளுக்குப் பதிலாக சமஸ்கிருதத்திற்கு ஆதரவு காட்டவேண்டுமென தேசிய இயக்கத்தி னர் கருதினர். இறந்தமொழி எனினும் தெய்வீக மொழி என்ற அளவில் அதற்கு மதிப்பு உயர்த்தப் பட்டது. சமஸ்கிருதத்தின் சொற்களை மிகுதியாக வழங்கும் அவா வளர்ந்தது. இந்த நிலையில் சமஸ் கிருதச் சொற்களை நிரம்ப சேர்த்து லல்லுலால் உண்டாக்கிய இந்தியின் மீது கற்றோர்- எழுத்தாளர் கவனம் சென்றது. வழக்கத்திலிருந்த உருது மொழியுடன் லல்லுலால்ஜியின் இந்தி போட்டியிட் டது. இந்து-முஸ்லிம் இருபாலாரும் உருது மொழி யைப் பேசியபோதிலும் மொழிப் பிரச்சினையில் சமஸ்கிருதம் மிகுந்த இந்தி இந்துக்களின் கலாச் சாரத்தையும் அரபி பாரசீகம் கலந்த உருது முஸ்லீம்களின் கலாசாரத்தையும் காட்டுவனவாகும் என்ற எண்ணம் பிறந்தது. (தேசிய இயக்கத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இந்தி-உருது மொழிப் பிரச்சினை உண்டாகி விட்டது என்று சொல்லலூம் மொழிப் பிரச்சினை பற்றிய கட்டுரையில் பண்டித ஜவஹர்லால் நேரு இதை ஒப்புக்கொள்ளுகிறார். அவர்

கூறுவது:

"பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற் பகுதியில்தான் இந்தி—உருது என்ற சொற்