உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மொழிப் போராட்டம்

அதாவது எழுத்து வடிவங்களைத் தவிர இரண்டும் உண்மையில் ஒரே மொழிதான் என்று சொல்லப் படுகிறது. அவர்கள் கூறுகிறபடி இரண்டும் ஒரே மொழியாயிருந்தால் இந்த மொழிச் சண்டை இரத்தக் கிளரி ஏற்படும்வரை வளர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டும் ஒன்றாயிருந் தால் பொதுமொழி தேடும்போது சச்சரவு ஏன் வளர்ந்தது? இவ் விரண்டையும் சமாதானப்படுத்த மூன்றாவது மொழியொன்று தேடப்படுவானேன்? ஒரு நூற்றாண்டுக்கு வேண்டுமானால் இந்திக்கும் உருதுவுக்கும் சமாதான உறவு இருந்திருக்கும். இந்தி - உருது இவை இரண்டிடையே உண்டா யுள்ள வேற்றுமையை விளக்கவந்த உருது மொழிப் பேராசிரியர் அப்துல் ஹக் என்பவர்.

CC உதாரணமாக உருதுப் பத்திரிகையில் கூறப்படும் செய்தியை இந்தி தெரிந்தவரால் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல் இந் திச் செய்தித்தாளில் காணப்படும் செய்திகளை உருது தெரிந்தவரிடம் சொன்னால் அவரால் சரியாக உணர்ந்துகொள்ள முடியாது.

என்று கூறுகிறார். “ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருமொழியினரும் இருந்து வருகின்றனர் ” என்று அப்துல்ஹக் கவ லைப்படுகிறார். இரண்டு மொழிகளிலுமுள்ள இலக் கிய வளர்ச்சியிலல்ல, அன்றாடம் வரும் செய்தித் தாள், நடையிலேயே அவ்வளவு வேற்றுமை இருக் கிறது. மிக எளிய நடையில் எழுத்துவாசனையே அறியாத சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் வருவது செய்தித்தாள். அந்த நிலையிலேகூட இந்தி மொழியில் வெளிவரும் செய்தியை உருதுமொழி மட்டும் தெரிந்தவரிடம் சொன்னால் புரிந்துகொள்வ தில்லை. அதேபோல் உருதுச் செய்திகள் இந்தி தெரிந்தவருக்குப் புரியா.