உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே அரசியல் மொழியா?

67

தேவையானால் இன்னும் சில எடுத்துக்காட்டுக் கள். தென் ஆப்பிரிக்கா யூனியனில் 1 கோடி 13 லட்சம் மக்கள். அதற்கு இரண்டு அரசாங்க மொழிகள்.

ஆப்கனிஸ்தானத்தின் குடிமக்கள் 1 கோடி 20 லட்சம். அங்கு இரண்டு மொழிகள் அரசியல் முதன் மொழிகளாக விளங்குகின் றன.

பக்கத்திலிருக்கும் இலங்கைத் தீவில் ஆங்கி லம், தமிழ், சிங்களம் மூன்றும் அரசியலில் உரிமை பெற்றுள்ளன.

எனவே அரசியல் அலுவல்கள் ஆற்ற ஒரே மொழிதான் வேண்டும் என்பது பொருளற்றது. நாம் மேலே குறிப்பிட்ட நாடுகளில் பல மொழிகள் இருப்பதால் எத்தகைய இடையூறும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த நாடுகளைவிட இந்தியா எத் தனையோ மடங்குகள் மக்கள் எண்ணிக்கையிலும், நிலப்பரப்பிலும் பெரிது. ஆனால் அந்த நாடுகளின் பல்வேறு மொழியினரிடைக் காணப்படும் பெருந் தன்மை மட்டும் இந்தப் பெரு நாட்டிற்கு இல்லா மற் போவானேன்?

.

சுவிட் ஜர்லாந்துக்குள்ளேயே பெர்ன் என்ற இடம் இருக்கிறது. அங்கு மட்டும் இரண்டுமொழிகள் அரசியல் மொழிகளாக வழங்குகின்றன. அந்தப் பெர்ன் இடத்தைவிட இந்தியா ஆயிரம் மடங்கு பெரிதாக இருக்கும். அந்தச் சிறு இடத்தில் நடத் திக்காட்ட முடிகிற அரசியலை இப் பெருங்கண்டம் நடத்திக்காட்ட முடியும், பிடிவாதமில்லை யென்றால்; ஒத்துவாழ வேண்டுமென்ற மனமிருந்தால்; நேர்மை யோடு நடக்க எண்ணம் ஏற்பட்டால்!

இந்தியாவிற்கு ஒரே அரசியல் பொதுமொழி வேண்டுமென்போர் கூறும் காரணங்களிலே ஒன்று அர்த்தமற்றதாகி விட்டது; மற்றொன்று அவசிய மற்றதாகி விட்டது.