உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

.

மொழிப் போராட்டம்

அதே பாகிஸ்தான் உத்திரவை எதிர்த்து கிழக்கு வங்க முஸ்லிம்கள் வங்க மொழிக்காக போராடி னார்கள். முஸ்லிம் மாணவர்கள் தாய் மொழியை விட்டுக்கொடோம் எனத் தெரிவித்தார்கள். பின்பு உருது வங்காளம் இருமொழிகளும் ஏற்றுக்கொள் ளப்பட்டன. கிழக்கு வங்க முஸ்லிம்கள் போராடி யதை ஆதரித்து இந்திய தேசியப் பத்திரிகைகள் எழுதின. அதே மொழிப்பற்று காணப்பட்டால் ஏன் தடுக்கவேண்டும்? ஏளனஞ் செய்வதேன் ? வங்காளி காட்டும் தாய்மொழிப்பற்று தமிழனுக் குக் கிடையாதா? வங்கத்தில் ஏற்பட்ட மொழிப் போராட்டத்தைப் பெருமை படுத்திய அதே செய் தித் தாள்கள், தமிழ்நாட்டில் இந்தி வேண்டாம் என்றி கூறுவதை ஏன் இருட்டடிப்பு செய்யவேண் டும்? ஏன் தாழ்வுபடுத்தி உரைக்கவேண்டும்?

உண்மையில் இந்தி பொதுமொழியாக வேண் டும் என்ற கொள்கையில் உறுதியிலிருந்தால், வங் கத்தில் முதல் மொழியாகக் கட்டாயப்படுத்திப் பார்க்கட்டும். இந்தி பிறந்த வட நாட்டிலேயே அதற்குச் செல்வாக்கில்லை. அஸ்ஸாமில் இந்தி கட்டாயப் பாடமில்லை. வட நாட்டில் கட்டாயப் படுத்தப்பட்டு வெற்றி பெற்றதும், வேண்டுமானால் தென்னாட்டுக்கு வரட்டும். மராட்டியம் கூட இந்தியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

முதலில் விளக்கங் காட்டியபடி இந்தி தோன்றி 150 ஆண்டுகள்கூட ஆகவில்லை. இலக்கிய வளமோ, கலைத்துறை வளர்ச்சியோ இல்லாத மொழி அது. அதைவிட முன்னேற்ற மடைந்த, பழம் பெருமை வாய்ந்த மொழிகள் அதற்கு எவ் வாறு முதலிடம் அளிக்க முன் வரும் ?

இந்தி பெரும்பாலோரால் பேசப்படுகிறது என்று று கணக்கு கொடுக்கப்பட்டு, அந்தக் கார ணத்தினாலேயே அது இந்தியாவின் தேசிய மொ ழி