உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மொழிப் போராட்டம்

பழகவும், வடநாட்டிற்சென்று வியாபாரம் செய்ய வும் இந்தி மொழிப் பயிற்சி வேண்டும் என்று கூறி வாதிடுகின் றனர்.

பாடமாகவாவது

வடநாட்டு

வடநாட்டாரோடு பழகுவதற்கு என்று தென் னாட்டிலுள்ளவர்கள் இந்தி படிக்கவேண்டுமென்று கூறுவோர், வடநாட்டிலுள்ளவர்கள் தென்னாட் டவரோடு குறிப்பாகத் தமிழகத்தாரோடு பழகுவ தற்கு என்று வடநாட்டின் எந்தப் பகுதியிலாவது தென் மொழியைத்-தமிழை அவர்கள் விருப்பப் ஏற்றுக் கொண்டுள்ளார்களா என்பதைச் சற்று சிந்திக்கவேண்டும். மார்வாரி, குஜராத்தி, மூல்தானி,பனியா, பட்டாணி போன்றவர்கள் தென்னாடு வந்த பிறகு அவசி யத்தையொட்டி, பழக்கத்தினால் தப்புந்தவறுமாகக் கற்றுக்கொண்டு தமிழகப் பகுதிகளிலும், ஏனைய திராவிட மொழிப் பகுதிகளிலும் சுற்றித்திரிகிறார் கள். அப்படியே இங்கு வருவோர் யாவரும் கற்றுத் தெரிந்துகொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பழக்கத்தினால் தெரிந்துகொண்ட ஒருசில சொற் களை வைத்துக்கொண்டே காலந்தள்ளுகிறார்கள். அதுபோல தமிழ் நாட்டாரும், ஏனைய திராவிடப் பகுதியினரும் வடநாடு செல்ல நேர்ந்தால், சென்ற பிறகு அவசியத்தையொட்டி பழக்கத்திலுள்ள சொற்களைமட்டும் தெரிந்துகொண்டு வாழமுடியுமே இதை விடுத்துத் தமிழ்நாட்டாரனைவரும் இந்தியைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். என்று கூறுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டிலுள்ள மக்களனைவரும் அடிக்கடி அலகாபாத்துக்கும், ஆமதாபாதுக்கும், டில்லிக்கும், டார்ஜ்லிங்குக்கு மாகவா சென்று வருகிறார்கள் ? அப்படிச் செல் லுபவர்கள் மிகச்சிலர்தானே இருக்கமுடியும் ! அவர்கள் வேண்டுமானால் அவசியத்தை யொட்டித் தாங்களாகவே விரும்பி இந்தியையோ அல்லது