பக்கம்:மொழியின் வழியே.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி | 0 |

கொண்டு உழைத்தால், முடியாதது எதுவுமில்லை. வழு மலிந்த நடையில் செய்திகளும், மொழிபெயர்ப்பும் வெளி வருவதற்குக் காரணம் என்ன தெரியுமா? உண்மைப் பற்றும், ஆர்வமும் இல்லாமைதான். எப்படி எழுதினால் என்ன? இதையெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள்? அதிகம் விற்பனையானால் போதும் என்ற இத்தகைய பாராமுகமான மனப்பான்மைகளே காரணம்.

ஒரு நாளிதழ் பிழையற்ற நடையில் செய்திகளைத் தர வேண்டுமானால் கீழ் வருவனவற்றைச் சரியானபடி நடை முறையிற் கொள்ள வேண்டும்.

தலையங்கம், துணைத் தலையங்கம், இவற்றை எழுதுகிற ஆசிரியர்கள், நேபன், ராய்ட்டர், பி.டி.ஐ. முதலிய செய்தி நிலையங்கள் பிற மொழியில் அனுப்பும் செய்திகளைப் பிழையின்றி மொழிபெயர்க்கத் தெரிந்த உதவியாசிரியர்கள், சொற்பொழிவு முதலிய நிகழ்ச்சிகளுக்கு நேரிற் சென்று குறிப்பெடுத்து வருகிற நிருபர்கள், பிழை திருத்துவோர், அச்சுக் கோப்போர் . இத்தனை பேரும் ஆர்வம் குன்றாமல் உண்மையாக உழைத்தால் ஒரு நல்ல நாளிதழ் தூய்மையான மொழி நடையோடு உருவாகிவிட முடியும். ஆசிரியர்களாகவும், உதவியாசிரியர்களாகவும் வேலை பார்க்கின்ற யாவர்க்கும் சந்தி இலக்கணம், வாக்கிய அமைப்பின் பல்வேறு நிலைகள், மொழியின் பொது மரபு ஆகிய செய்திகள் உறுதியாகத் தெரிந்திருக்க வேண்டும். - -

வாக்கியம் எழுதிப் பழக்கமில்லாத ஆசிரியன் சந்திப் பிழையும், மரபுப் பிழையும், பொருட் பிழையும் மலியப் பெரும்பாலான பிற மொழிச் சொற்களைக் கலந்து தலையங்கம் எழுதுவதும், மொழிபெயர்க்கத் தெரியாமல் 'மைனர் புராஜெக்ட் - என்பதைச் சிறுநீர்ப்பாசனத் திட்டம் (சிறுநீர்என்பதைப் படித்ததும் பலருக்கு என்ன பொருள் தோன்றும்?) என்று மொழிபெயர்க்கும் உதவியாசிரியனும், பெண் கல்வி என்பதைப் பெண் கலவி என்றும், காந்தியடிகளின் நிர்மானத்