பக்கம்:மொழியின் வழியே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 9

நெருக்கமான பொது இயல்புடையது சொல் மரபு. கிளவி யாக்கம்’ என்றும் மொழி மரபு என்றும் தொல்காப்பியரும், நேமிநாதமுடையாரும், பெயரிட்டுக்கொண்டு இலக்கணம் வகுத்த அடிப்படை நோக்கம் இதுவே ஆகும். காற்றையும் நீரையும் பெற்று வளர்ந்து கிளைத்து வளமடைந்த பழுமரம் ஒன்றிற் கனியும் கனியைப்போல, மரபையும் இலக்கணத்தையும் போற்றி ஒழுகும் மொழியில் பண்பாடு கனியும். கணிக்கு முன் பூ, காய் ஆகிய இரு தொடக்க வடிவங்கள் நிகழுவதுபோல வழக்கும் இலக்கியமும் ஆகிய சான்றோர் மொழி ஆட்சிகளை மூலமாகக்கொண்டே மொழியின்பண்பாடும் உருப்பெறுகின்றது.

மலை முகட்டில் அருவியாக வீழ்ந்து சமவெளியில் ஆறாகப் பாய்ந்து கடலோடு கலக்கும் நதி ஒன்றில் மலையிலிருந்தே உருண்டுவந்த கரடுமுரடான சிறு பாறைக் கல் ஒன்று நாளடைவில் உருண்டு திரண்டு உருவத் திரட்சி யடைந்து வட்டச் சிறு கல்லாக மாறிவிடுகிறதல்லவா? இதேபோலக் காலத் தொன்மையாலும் பழவழக்கினாலும் ஆன்றோர் பழக்க மிகுதியாலும் கூட மொழி பண்படுவதுண்டு. ஆயினும் ஒன்றுமட்டிலும் உறுதி. சான்றோர் இலக்கிய ஆட்சி இல்லாமல் பன்னெடுங்காலமாக மக்கள் வழக்கு ஒன்றினளவிலேயே நிலவிவரும் மொழிக்குப் பண்பாடு உயர்ந்த தரத்தினதாக இருக்கமுடியாது. மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவதுபோலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு இலக்கணம், பழவழக்கு, இலக்கியம் ஆகியவை இன்றியமையாதன ஆகின்றன.

'கண்ணுதற் பெருங்கடவுளும் -

கழமோ டமர்ந்து .

பண்ணுறத் தெரிந்தாய்ந்த,

வெம் பசுந்தமிழ்' -

(திருவிளையாடல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/11&oldid=621356" இலிருந்து மீள்விக்கப்பட்டது