பக்கம்:மொழியின் வழியே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மொழியும் வரலாறும்

முகமதியப் பேரரசர் சிலர் சுவடிகளைச் சேகரித்து

அரும்பெரும் நூல் நிலையங்கள் வைத்திருந்தனர் என்றும் நாலந்தாவில் அர்ஷவர்த்தனர் பல்கலைக் கழகங் கண்டார் என்றும் பல்லவர் காலத்தே காஞ்சியில் கடிகைகள் (மொழிக் கல்லூரிகள்) இருந்தன என்றும் வரலாற்றிலே நாம் படித்து மகிழ்கிறோம். தமிழ் வேந்தர் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக மதுரையில் தமிழ்ப் பல்கலைக் கழகச் சங்கம் அமைத்துப் பேணி வளர்த்துப் பெருமை கொண்டதையும், அச்சங்கத்தில் அமுத இளமையும் அழகு நலமும் கொண்ட நூற் செல்வங்கள் பல அரங்கேறி உரங்கொண்டதையும் இந்நாட்டு வரலாற்றில் நாம் அறிவதில்லை. அறியவுங் கூடுவதில்லை. தமிழகத்து இளஞ்சிறார்க்கும் இளைஞர்க்கும் கற்பிக்கப் பெறும் வரலாற்றில் நூற்றிலே ஒரு குறும்பகுதியாதல் தமிழ் நாட்டைப் பற்றியதில்லை. அவர்கள் கற்கும் வரலாறுகள் யாவும் அவர்கள் கண்டும் கேட்டும் சூழ்ந்தும் இராத - இனியும் காணவோ, கேட்கவோ இயலாத இடங்களைப் பற்றியவையே. இதன் பயனாகக் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரை வற்புறுத்திக் காணச் செய்யும் ஒரு வகைப் பகற்கனவாக ஆகிவிட்டது வரலாறு. விண்டுசொல்லப் புகுந்தால் வேதனைக்குரிய செய்தியாகும். தமிழ்நாட்டு வரலாறு தமிழரில் பெரும்பாலோர் அறியாத அறிய முடியாத ஒன்று ஆகிவிட்டது. இது வருந்தத் தக்கதே! வரலாற்று உண்மைகள்

- தமிழ் நாட்டு வரலாறு உலக வரலாறுகள் எவற்றிற்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டதாகும். இது சம்பிரதாயத்திற்காகச் சொல்லுகின்ற சிறப்பன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/21&oldid=621366" இலிருந்து மீள்விக்கப்பட்டது