பக்கம்:மொழியின் வழியே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மொழியின் வழியே!

கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என்னும் ஆறு சுவைகளையுடைய வயிற்றுணவினும் சொற் சுவை, பொருட்சுவை என்னும் இரண்டேயிரண்டு சுவைகளை யுடைய கேள்வி பெரிதும் விரும்பப்படுகிறதென்ற நயமான பொருள் நுண்மையை இந்தச் சொற்கள் வெளிப்படுத்துகின்றன. 'சிறிது என்பதனால் வயிற்றுணவு பெருகினால், நோய், காமம், மதர்ப்பு, கொழுப்பு முதலியன பெருகுவதோடு, பொருட் செலவும் மிகுதியாகும். செவியுணவு பெருகினால் சால்பு தவிர வேறு யாதும் தோன்றவே முடியாததோடு பொருட் செலவும் மிகுதியாவது மில்லை என்ற பொருட் செறிவைப் பெற வைக்கிறார். 'வயிற்றுக்கும் ஈயப்படும்' என்பதனால் வேளை தோறும் நம்மை வாட்டும் வயிற்றை இழித்துரைக்கிறார். 'ஈயென்கிளவி இழிந்தோன் கூற்றே" என்பதனால் ஈதல் வயிற்றின திழிபையும் கேள்வியினது பெருமையையும் உணர்த்தி விளங்குகிறது.

ஆக, இதுவரை கூறிய சில பல கருத்தமைதிகளாற் செவிச் செல்வமாகிய கேள்வியறிவு புவிச் செல்வங்கள். எல்லாவற்றுள்ளும் தலையாயதென்றும், தன்னையுடையார்க்குச் சான்றாண்மை நல்கி அவர் வாழ்வில் அமைதி நிலையெய்தத் துணை செய்யும் என்றும் வயிற்றுணவினும் மேலான இயல்பினையுடைய தென்றும் விளக்கி இக்கட்டுரையை இவ்வளவில் அமைக்கின்றோம். s]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/46&oldid=621391" இலிருந்து மீள்விக்கப்பட்டது