பக்கம்:மொழியைப் பற்றி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் எண்ணமும் மனித சமுதாயம் கூடிவாழ மொழி மிகவும் இன்றியமையாத தாகும். தங்கு தடை ஏதும் இல்லாமல் வளர்க்கப்பட்ட மொழி யும், ஒற்றுமையும் இருப்பதன் மூலம்தான் உண்மையான வாணிபம் பெரிய அளவில் செய்திட, இன்றைய முதலாளிய உலகில் முடியும். பல்வேறு வகுப்புகளாக மக்கள் பிரிந்து உரிமையுடன் வாழ மொழி வளர்ச்சி தவிர்க்க முடியாதது, விற்ப வர்களுக்கும் பொருள் வாங்குபவர்களுக்கும் மொழியே சீரான தொடர்பை உண்டாக்குகிறது. பெரிய உடைமை உரிமை வாளர்களுக்கும் சிறிய உடைமையாளர்களுக்கும் நல்லுறவை உண்டாக்குவதும் மொழியே. மொத்தத்தில் வர்ணிபங்களின் நல் இயக்கத்திற்கு மொழி வளர்ச்சி இன்றியமையாதது. என்வே, தேசிய மா நிலங்களை அமைவதற்குப் பாடுபடும் ஒவ்வொரு தேசிய இயக்கமும் இந்த அடிப்படை மூலமே இன்றைய முதலாளியச் சூழலில் பாடுபட வேண்டி இருக்கிறது. மொழி வளர்ச்சி பெறாத நிலையில் அந்தக் குறிக்கோளைத் தேசிய இயக்கங்கள் அடைந்திட இயலாது” எனத் தன்னாட்சி உரிமை கோரும் இனங்களின் உரிமையைக் குறித்து இலெனின் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனித வாழ்விற்கு மொழி எந்த அளவிற்கு இன்றியமையாதது என்பதை இலெனின் வாழ்க்கையில் இருந்து அறிகிறோம். " அறிவியலின் ஒவ்வொரு துறையிலும் அறிவின் கோட் பாடுகளை, நாம் வட்டார மொழி வழக்கில் தோக்கவேண்டும். நம் அறிவு எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதாகக் கொள்ளக்கூடாது. நம் அறிவை முழுமையானதாக நினைக் கக் கூடாது. அதில் எவ்வித மாற்றத்திற்கும் இடமில்லை என்றும் நினைக்கக் கூடாது. அறியாமை நிலையில் இருந்துதான் அறிவு வளர்கிறது என்பதை மறக்கவே கூடாது. அறிவு வளர வளர நாம் ஏற்கனவே பெற்ற அறிவு போதுமானதில்லை, சரியான