பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

6T6 of வழங்கத் தெலுங்கில் மனமு, மன என வழங்குகின்றது. யாம் என்பது ஞாம் எனத் திரிந்து, பின்னர் நாம் என்றாகி யிருக்க வேண்டும். யமன் ஞமன் எனவும் நமன் எனவும் ஆதல் காண்க.

“யாங்கள் என்னும் வடிவம் முதன் முதலில் சிலப்பதி காரத்தில் இடம் பெறுகிறது.”

“யாங்களும் நீள்நெறிப் படர்குதும்’

3. முன்னில் ஒருமை

1. நீ என்பது எழுவாய் வடிவம்: நின் என்பது உருபு ஏற்கத் திரிந்த வடிவம்; உன் என்ற வடிவும் உள்ளது. நீ என்பதே பழைய வடிவாகும். நின் என்பதில் னகரம் இருத்த லால் அதன் நீள் வடிவம் நீன் என்றே இருந்திருக்க வேண்டும். கன்னடத்தில் நீன் என்ற வடிவம் உள்ளது. . .

2. மலையாளத்திலும் நீ, நின் என்னும் வடிவங்களே உள்ளன.

கன்னடத்தில் நீன் நீனு என்பன எழுவாய் வடிவங்களாம். நின் என்பது உருபு ஏற்கத் திரிந்த வடிவாகும்.

தெலுங்கில் ஈவு நீவு என்பன எழுவாய் வடிவங்களாம். நின், நீ என்பன உருபு ஏற்கத் திரிந்த வடிவங்களாகும்.

4. முன்னிலைப் பன்மை

1. தமிழில் நீம், நீயிர் என்னும் வடிவங்கள் முன்னில்ப் பன்மை வடிவங்களாம். நீம் என்ற சொல் வழக்குச் சிந்தாமணியில் காணப்படுகிறது. -சிற் 1932/3

நீங்கள் என்பது பல்லவர் காலத்து வழக்காகும்.

“பிணமுடை உடலுக்காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்’ -அப்பர் தேவாரம் 4/45/7

1. D. N. u. 185