பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இல்லை என்பது இருதிணை ஐம்பாற்கண் வருதலோடு முக்காலத்துக்கும் பொதுவாகவும் வருதல் உண்டு.

வந்தது இல்லை-இறப்பு வருகிறது இல்லை-நிகழ்வு வருவது இல்லை-எதிர்வு

2. எதிர்மறை வினையெச்சங்கள்

பழந்தமிழில் எதிர்மறை வினையெச்சங்கள் மூவகை வடிவில் வழங்கின.” -

1. அஞ்சா-அஞ்சு + ஆ

2. அஞ்சாது-அஞ்சு + ஆ+து

3. அஞ்சாமல்-அஞ்சு + ஆ+மல்

இக் காலத்து மல் ஈற்று வினையெச்சங்களே மிகுதியாக வழங்குகின்றன. w

ஆ கார எதிர்மறையை முன்னிட்டு வரும் விடு என்னும் துணை வினையும் இக் காலத்து எதிர்மறைப் பொருளில் பயின்று வருகிறது.”

சொல்லாவிட்டால்

போகாவிட்டால்

3. எதிர்மறைப் பெயரெச்சம்

வினைப் பகுதியோடு ஆகாரம் சேர்ந்த வடிவே.(செய்யா) பழைய பெயரெச்ச வடிவாகும்.

ஒவாப் பிணி-திருக்குறள்-134 வாழாக் கவரிமா- “ -963

இலக்கணிகள் இதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெய ரெச்சம் என்பர்.

1, 2, 3. D. W. M. பக். 336, 337