பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

தொடரின் முன்போ, பின்போ நிற்கத் தமிழில் விகுத் தொடர்கள் அமையும்.

‘20. பெயர், வினைகளை அடுத்துக் கொல், ஆ, ஒ முதலாய இடைச் சொற்கள் வரத் தமிழில் ஐயத்தொட்ர்கள் அமையும்

அவளு இவன அறியேன் அவனே இவனே அறியேன் அணங்குகொல் ஆய்மயில்கொல் - 21. இன்று ஆங்கிலத்தை ஒட்டி ஐயத் தொடர்களில் அல்லது எனும் சொல் புகுந்துள்ளது.

சோறு அல்லது கறி உண்டான் சோருே கறியோ உண்டான் என்பது பழைய தொடர். 122. வடமொழிக் காப்பியங்கள் தமிழில் புகுந்தமை யால் அக் காப்பியக் கவிதைகளைப் பின்பற்றிப் பல்வேறு விதமான அமைப்புடைய தொடர்கள் தமிழில் புகுந்துள்ளன.

‘பரக்கழி இதுநீ பூண்டால் புகழையார் பரிக்கற் பாலார்’ -கம்பர் வாலிவதை-79 இதன்கண் செயப்படுபொருள் முதற்கண் வந்துள்ளமை காண்க.

“இச் சூத்திரம் எழுத்தினது இலக்கணம் சொல்லுதல் நுதலிற்று என்றவாரும்.’

‘முதல் இடை கடைநிலை எழுத்துகள் சிறப்பியல்பு கொண்டவையாம் என்க.”

இவை போல்வன தமிழ் முடிபெனக் கூறுதற்கில்லை; வடமொழி முடிபுகளே.

23. சில வடமொழித் தொடர்கள் ஆங்கிலம் வழி யாய்த் தமிழ்க்கண் புகுந்துள்ளன.

“எவன் படிக்கிருனே அவன் தேர்ச்சியடைவான்’ ‘குற்றம் செய்புவர்கள் தண்டிக்கப்படுவார்கள் p