பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

பொதுவாகக் கொண்டு கூட்டுப் பொருள்கோள் வட மொழியில் மிகுதி என்பர்.

வடமொழித் தாக்குதலால் தமிழ்க்கண்ணும் கொண்டு கூட்டும், மொழிமாற்றும் சில இடங்களில் வருகின்றன.

சுரை மிதப்ப அம்மிஆழ-ஆற்றாெழுக்கு சுரையாழ அம்மி மிதப்ப-மொழிமாற்று ‘28. பண்டைக் காலத்து வினைமுற்று (பயனிலை) முன்பும் பெயர் (எழுவாய்) பின்புமாகத் தொடர்களில் இடம் பெற்றன.

நோகோ யானே’ பிற்காலத்தும், செய்யுட்கண்ணும் உணர்ச்சிபடப் பேசுங் கால் உரைநடைக்கண்ணும் அம் மரபு இடம் பெற்றன.

‘கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால் -கம்பர்-திருவடி. 55

  • 29. ஒருவர் என்பதும், அவர் என்பதும் ஆண், பெண் எனும் இருபாற்கும் பொதுவாக நிற்றல், திராவிட மொழியின் தனித் தன்மையாகும்.

ஈண்டு ரகர ஈறு ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவாக வருகிறது.

ஒருவர் வந்தார் அவர் வந்தார் ஆசிரியர் வந்தார் . , 30. யாவர் என்பதன் மரூஉ மொழியாகிய யார் எனும் பன்மை வினப்பெயர், பிற்காலத்து ஒருமைப் பெயர் களோடும் இயைந்துள்ளது. -

இவன் யார் என்குவை யாயின்-புறம். 25 31. அன்பு காரணமாக அஃறிணையை உயர்திணையாக வும், உயர்திணையை அஃறிணையாகவும் சுட்டுதல் உண்டு.