பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. மொழியும் மொழி வரலாறும்

மொழியின் தோற்றம்

மொழி எனும் சொல்லுக்கும், முழங்கு எனும் சொல்

லுக்கும் தொடர்புண்டு என்றும், மொழி என்பதினின்றே

“முழங்கு’ எனும் சொல் தோன்றிற்று என்றும் சிலர் கூறுவர்.

‘உணவு கோடற்கும், சுவாசித்தலுக்கும், பிறவற்றுக்கும் அமைந்த வாய், மூக்கு, குரல்வளை, நார்கள் முதலாய பல்வேறு உறுப்புகளை மனிதன் பேசுதற்கும் பயன்படுத்திக் கொண்டான். அஃது அவனது அறிவாற்றலைக் காட்டுகிறது.

தொடக்க கால மனிதன் முதன்முதலில் தன் கருத்தினைச் சைகைகளாலேயே பிறருக்கு அறிவுறுத்தி வந்தான். அச் சைகைகளுக்கு ஒலியும் துணை நின்றது. காலப் போக்கில் சைகைகள் குறைய, ஒலியே கருத் துணர்த்தும் கருவியாகி மொழி எனப்பட்டது. ஒலியும், அஃதுணர்த்தும் பொருளும் வேறின்றி நிற்பதே மொழியாகும். ஒலிக்கும் அதன் பொருளுக் கும் தொடர்பேற்பட்ட சூழலை மேட்ைடார் ஐவகைக் கொள்கைகளாகப் பகுத்துக் காட்டுவர். - 1. Gums) Qrsh Qmrsos (The Imitation theory or the

Bou-wow theory):

ஒரு பொருள் ஒலிப்பது போல் ஒலிக்க அவ் வொலி, அப் பொருளை உணர்த்துவதைக் காண்கிருேம். காக்கை எனும்

1. Collected Papers—L, 24.