பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. செந்தமிழும் கொடுந்தமிழும்

தொன்றுதொட்டுத் தமிழ், பேச்சுத் தமிழ், இலக்கியத் தமிழ் என இருவகையாக இயங்கி வருகிறது. வழக்கும் செய்யுளும் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவதும் இவ்விரு வகைப் பிரிவையேயாகும். வழக்கு என்பது பேச்சுத் தமிழ்: செய்யுள் என்பது இலக்கியத் தமிழ். செய்யுள் வடிவாகவும், உரைநடை வடிவாகவும் வழங்கும் இலக்கிய மொழியைச் செந்தமிழ் என்றும், பேச்சு வழக்கைக் கொடுந்தமிழ் என்றும் வழங்கி வருகின்றனர்.

வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுல கத்துக் கற்றாேர் அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய பொதுத் தமிழே இலக்கியத் தமிழாகும். பிற்காலத்தில் இடத்துக்கு இடம் வேறுபடும் திரிபுகளைத் தவிர்த்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது வடிவங்களைத் தமிழில் எழுதி வந்தனர். அதுவே செந்தமிழ் எனப்பட்டது. பிறகு அது புலவர் தமிழ் என வழங்கலாயிற்று. பழங்காலத்தில் செந்தமிழ் என்பது இலக்கிய வழக்குத் தமிழ் என்ற பொருளி லேயே வழங்கியது.

இக் காலத்தில் புலவர் நடை வேறு, பொதுமக்கள் நடை வேறு என இருவேருகப் பிரிந்து எழுத்து நடை-இயங்குகிறது. பத்திரிகைத் தமிழே பொதுமக்கள் தமிழ் எனலாம். மக்கள் மிகுதியாக வழங்கும் வழக்குச் சொற்களையே பத்திரிகைகள்