பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இவை ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினேராம் நூற்றாண்டுவரை கிடைத்த செப்பேடுகளினின்றும் கல்வெட்டு களினின்றும் எடுக்கப்பட்ட சான்றுகளாகும். இவற்றில் உள்ள தமிழ்ச் சொற்களில் எல்லாச் சூழ்நிலைகளிலும் வல்லொலி யாகவே இடம்பெற்றுள்ளன. அதே சமயத்தில் வடசொற்கள் அவற்றிற்குரிய மெல்லொலிகளாக இடம் பெற்றுள்ளன.

ராஜகேசரி (Rajagecari)

&tiglosit (Cangaman) செளகரியம் (Sougariyam) அசுர கண (acuragana”)

5. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரில பட்டர் என்னும் வடமொழியறிஞர் சோறு என்ற தமிச் சொல்லை சோர் (Cor) எனவே குறித்துள்ளார். அவர், தாம் எழுதிய ‘தந்த்ர வார்த்திகா என்னும் நூலில் ஐந்து தமிழ்ச் சொற் களைத் தந்து ஆய்கின்றார்; அவை ஐந்தும் திராவிடச் சொற் களே என்று குறிப்பிடுகிரு.ர். சோர (cor)-சோறு; அதர் (atar): பாப் (pap)-பாப்பு (பாம்பு என்பதன் வேற்றுமைத் தொடர் வடிவம்); மால் (mal)-(மகள் என்பதன் திரிபு) வயிர் (wayil)-வயிறு என்னும் சொற்களைத் தந்து. இவற்றின் பொருள் சிறப்பைக் காட்டுகிறார் சோர்; அதர் பாப் எனும் மூன்று சொற்களிலும் தடையொலிகள் வல்லொலிகளாகவ்ே இடம் பெற்றுள்ளன.

6. பல்லவர், சோழர் காலங்களுக்குப் பிறகு எழுந்த கல்வெட்டுகளிலுள்ள தமிழ்ச் சொற்களில் இருவகை ஒலி வடிவங்களும் இடம் பெற்றுள்ளன.

1. A History of the Tamil Language p. 130. 2. The unvoicing of initial stops became established in Tamil^ 600 A. D. in tho non-initiai position voicing started as late as 1360 A. D.-Comparative Dravidian Prionology-Kamili Zvolabil-p. 79.