பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இகரம் உகரமாக மாறுதல் உண்டு

களிறு-கஸ்ரீ

தமிழ்-தமுழ்

மதில்-மதுல்

தளிர்-தளுர்

துளிர்-துளுர் ஈகாரம்: மாற்றம் இல்லை. உகரம்

உகரம், மொழியீற்றின்கண் வல்லெழுத்துத் தொடரு மிடத்துக் குற்றியலுகரமாக மாறுகிறது; அடுத்து யகரம் வருமிடத்துக் குற்றியலிகரமாக மாறுகிறது. (தொல்எழுத்து-36, 37, 407, 34,35,411.) -

மொழியீற்றின் கண் உள்ள உகரம் தெலுங்கில் சில

சொற்களில் இகரமாக மாறுகிறது.

பத்து-பதி (தெலு)

மறு-மறி (தெலுங்கு)

மாசு-மாசி (தெலுங்கு):

தமிழிலும் யகரம் வருவழி உகரம் இகரமாக மாறு கிறது. -

சிறுவர்-சிறியோர்

பெருமை-பெரியோர்

அருமை-அரியது

கருமை-கரியது

முதுமை-முதியோர்

வடசொற்களில் அகரமோ, ஒகரமோ மெய்களைத் தொடருமிடத்து உகரம் ஒகரமாக மாறுதலைச் சோழர் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

புத்தகம்-பொத்தகம்

உலகம்-ஒலகம்

குலோத்துங்க-கொலத்துங்க

தமிழ்ச் சொற்களிலும் இம் மாற்றம் காணப்படுகிறது.

குலை-கொலை’

ஊகாரம்: மாற்றம். இல்லை.

1. C. D. P.-L. 48 t 2. C. D. P.-L. 55