பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

4. நான்கு

தமிழ்-நான்கு, நால்கு, நாலு; மலையாளம்-நால்; கன்ன டம்-நான்கு; தெலுங்கு-நாலுகு.

பெயரடைகளாக வருங்காலத்துத் தமிழில் நன்னன்கு, நாற்பது எனவும், மலையாளத்தில் நால்பது எனவும், கன்னடத் தில் நால்வத்து (40), நானூறு (400) எனவும், தெலுங்கில் நலுபை (40), நானுாறு (400) எனவும் வழங்குகின்றன.

இதல்ை, நல், நால், நான் என்பன அடிச்சொற்கள் எனத் தெரியவருகிறது. நால் என்பது நாற் எனத் திரிதல் இயற்கை.

-> அடைகளில் குறுகிய வடிவமும் நெடில் வடிவமும்

வருகின்றன.

நன்னன்கு, நாற்பது நால், நான் எனும் இரண்டு வடிவங்களும் தொல்காப் பியத்தில் காணப்படுகின்றன. நால்கு என்பதே நான்கு எனத் திரிந்திருக்க வேண்டும்.

நால்கு என்னும் எண்ணுக்கு முன்னும் பின்னும் இரண்டு, மூன்று, ஐந்து எனும் எண்களுள் மெல்லினத்தை அடுத்துச் சொல்லாக்க விகுதிகள் இயங்குவதால், அவ் வெண்களின் ஒப்புமை நயத்தால் நால்கு என்பதும் நான்கு எனத் திரிபு பெற்றிருக்க வேண்டும். நன்னன்கு நானன்கு, நானூறு முதலிய சொல் வழக்குகளும் இம் மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

சங்க இலக்கியத்தில் நால்கு என்னும் சொல் வழக்குக் காணப்படுகிறது. அகம். 104-6; பத். 4-489: தொல்-442”

5. ஐந்து

தமிழ்-ஐந்து; மலையாளம்-அஞ்து, ஐந்து: கன்னடம்அய்து தெலுங்கு-அய்து, ஏனு.

1. D. N. L. 152 2. D, N. பக். 151