பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

நெடில் வடிவமும் குறில் வடிவமும் அடையாக வருகின்றன.

ஏழுநூறு எழுபது

தமிழ் ழகரம் கன்னடத்தில் ளகரமாகவும், தெலுங்கில் டகரமாகவும் வழங்குதல் இயல்பு.

கோழி, கோளி, கோடி ஏழ் என்பதே தொல் வடிவமாக இருத்தல் வேண்டும். எழு என்பது அதன் குறுக்கல் வடிவாகும்.

தெலுங்கில் டெப்பை என்பது எழுபதைக் குறிக்கும். எழுபை-எடுபை-டெப்பை. உயிர்ஒலி இடம் மாறி நின்றது.

8. எட்டு

தமிழிலும் மலையாளத்திலும்-எட்டு; கன்னடம்-எண்டு; தெலுங்கு-எனிமிதி.

தமிழில் எண்பது எனவும், தெலுங்கில் எண்பை எனவும், கன்னடத்தில் எண்டு நூறு எனவும், மலையாளத்தில் எம்பது எனவும் அடை வடிவங்களாக வழங்குகின்றன. பாண்டும் குறில் வடிவமே வழங்குவதால் எண் என்பதே அடிச்சொல் லாகும்.

தமிழ் ணகரம் தெலுங்கில் னகரமாக ஒலித்தல் மரபு. மண்-மன்னு; கண்-கன்னு இம் மரபால் எனிமிதி என்ற வடிவம் வழங்குகிறது. எனிமிதி என்பது எட்டு பத்து என்பதன் கூட்டு வடிவ மாகும். மிதி என்பது தெலுங்கில் பத்தை உணர்த்தும்.

பத்தை அடுத்து நிற்கும் ஒன்பது என்பதற்கு நிகராகத் தெலுங் கில் தொம்மிதி என்ற சொல் வழங்குகிறது. அதன் ஒப்புமை